மதுரை மீனாட்சி கோயிலில் நடைபெறும் விநாயகர் சதுர்த்தி விழாவை இணையத்தில் பார்க்கலாம்!

 

மதுரை மீனாட்சி கோயிலில் நடைபெறும் விநாயகர் சதுர்த்தி விழாவை இணையத்தில் பார்க்கலாம்!

மதுரை மீனாட்சி கோயிலில் நடைபெறும் விநாயகர் சதுர்த்தி விழாவை கோயிலின் இணையத்தில் பார்க்கலாம்.

தமிழகத்தில் நாளை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்க கூடாது என்றும் ஊர்வலமாக எடுத்துச் செல்லக்கூடாது என்றும் தமிழக அரசு அறிவித்தது. இந்த அறிவிப்புக்கு பாஜக மற்றும் இந்து முன்னணி கட்சி எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன. ஆனால் விநாயகர் சதுர்த்திக்கு தளர்வுகள் ஏதும் இல்லை என்றும் மக்கள் வீடுகளிலேயே கொண்டாட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றமும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

மதுரை மீனாட்சி கோயிலில் நடைபெறும் விநாயகர் சதுர்த்தி விழாவை இணையத்தில் பார்க்கலாம்!

இந்நிலையில் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் நாளை விநாயகர் சதுர்த்தி தினத்தை முன்னிட்டு கோயிலில் அமைந்துள்ள பிரம்மாண்டம் முக்குறுணி விநாயகருக்கு வெள்ளி கவசம் சாத்தப்பட்டு, சிறப்பு பூஜையாக 18 படியான பெரிய கொழுக்கட்டை படைக்கப்பட உள்ளதை முன்னிட்டு விநாயகருக்கு நடைபெறும் சிறப்பு பூஜையை திருக்கோயில் இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி http://www.maduraimeenakshi.org/ என்ற இணையதளத்தில் நேரலையாக காணலாம் என கோவில் நிர்வாகம் அறிக்கை வாயிலாக வெளியிட்டுள்ளது.