மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் டிசம்பர் 23ல் ஆருத்ரா தரிசனம்

 

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் டிசம்பர் 23ல் ஆருத்ரா தரிசனம்

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் டிசம்பர்  22 ஆம் தேதி இரவு முதல் டிசம்பர் 23 தேதி அதிகாலை வரை ஆருத்ரா தரிசனம் நடைபெறுகிறது. 

மதுரை:

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் இறைவன் மாணிக்க மேடையில் தனது வலது காலை ஊன்றி இடது காலைத் தூக்கி நான்கு கரங்களுடன் தேவர்கள் இசைக்கருவிகள் இசைக்க திருநடனம் புரிகின்றார்.

madurai

முதலில் இறைவன் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணத்திற்கு வந்த பதஞ்சலி மற்றும் வியாக்கிரத பாதர் ஆகியோரின் வேண்டு கோளுக்கிணங்க தில்லையில் ஆடிய நடனத்தை வெள்ளியம்பலத்தில் காட்டியருளினார் இறைவன்.

பின் ராஜசேகரப்பாண்டியனின் வேண்டுகோளினை ஏற்று கால் மாறி நடனம் ஆடினார். இங்கு இறைவனின் தாண்டவம் சந்தியா தாண்டவம், ஞானசுந்தர தாண்டவம் என்றழைக்கப்படுகிறது.

இத்தகைய சிறப்புகள் வாய்ந்த இத்திருத்தலத்தில் மார்கழி திருவாதிரை திருவிழா மற்றும் ஆனி திருமஞ்சனம் ஆகிய நாட்கள் ஆடலரசனுக்கு முக்கிய திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.

madurai

அந்த இரு நாட்களில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சிறப்பு அலங்கார,அபிஷேகங்கள் நடராஜருக்கு நடைபெறுகிறது.இக்கோயிலில் மட்டும் தான் பஞ்சலோகத்திலான பஞ்ச சபை நடராஜருக்கு உரிய ஐந்து உற்சவர் சிலைகள் அமைந்துள்ளது.

 இக்கோயிலில் ஆருத்ரா தரிசனம் நடைபெறும் நாளில் கால்மாறி ஆடிய வெள்ளியம்பல நடராஜர், சிவகாமி அம்மன், மாணிக்கவாசகர் ஆகியோரது உற்சவ சிலைகள் சுவாமி சன்னதியின் ஆறுகால் பீடத்தில் எழுந்தருள செய்யப்படும். 

madurai

இதர நான்கு சபை நடராஜர், சிவகாமி அம்மன் நுாறு கால் மண்டபத்தில் எழுந்தருள செய்யப்படும். இரு இடங்களிலும் ஒரே நேரத்தில் அபிஷேகம், ஆராதனை நடைபெறும். அதன் பின்னர் காலை 7:00 மணிக்கு பஞ்சசபை ஐந்து உற்சவ நடராஜர், சிவகாமி அம்மனுடன் மாசி வீதிகளில் வீதி உலா வருகிறார். 

அபிஷேக பொருட்களான பால், தயிர், இளநீர், நெய், மஞ்சள்பொடி, திரவியப்பொடி, எண்ணெயை டிசம்பர் 22 ஆம் தேதி இரவு 7:00 மணிக்குள் கோயில் உள்துறை அலுவலகத்தில் வழங்கலாம் என அறங்காவலர் குழு இணை கமிஷனர் நடராஜன் தெரிவித்துள்ளார்.