மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா ரத்து..! ஆனால் இணையத்தில் திருக்கல்யாண நிகழ்வு ஒளிபரப்பு

 

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா ரத்து..! ஆனால் இணையத்தில் திருக்கல்யாண நிகழ்வு ஒளிபரப்பு

மதுரை சித்திரை திருவிழா பல லட்சம் மக்கள் கலந்து கொள்ளக் கூடிய மிக பிரசித்தி பெற்ற திருவிழா. ஆனால் கொரோனா வைரஸால் பிறப்பிக்கப்பட்டிருக்கும் ஊரடங்கு உத்தரவால் அனைத்து மதம் தொடர்பான நிகழ்வுகளுக்கும் தமிழக அரசு தடை விதித்துள்ளது.

மதுரை சித்திரை திருவிழா பல லட்சம் மக்கள் கலந்து கொள்ளக் கூடிய மிக பிரசித்தி பெற்ற திருவிழா. ஆனால் கொரோனா வைரஸால் பிறப்பிக்கப்பட்டிருக்கும் ஊரடங்கு உத்தரவால் அனைத்து மதம் தொடர்பான நிகழ்வுகளுக்கும் தமிழக அரசு தடை விதித்துள்ளது. அதன்படி மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப். 25ஆம் தேதி தொடங்க வேண்டிய கொடியேற்றம் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

madurai meenatchi amman temple

இருப்பினும் மே 4ஆம் தேதி நடைபெறும் திருக்கல்யாண நிகழ்ச்சியை கோயில் இணையதளம் மூலம் ஒளிபரப்ப கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி www.madurai renal shi.org என்ற இணைய தளத்தில் திருகக்கல்யாண நிகழ்வு ஒளிபரப்படும். மே 4 ஆம் தேதி காலை 9.05 முதல் 9.29 மணிக்குள் பெண்கள் தங்கள் இல்லத்திலேயே புதிய மங்கலநாணை மாற்றலாம் என மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் இணை ஆணையர் அறிவித்துள்ளார்.