மதுரை மீனாட்சியம்மன் கோயில் அருகே கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து

 

மதுரை மீனாட்சியம்மன் கோயில் அருகே கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து

மதுரையில் உள்ள புகழ் பெற்ற மீனாட்சி அம்மன் கோயில் அருகில் சையது ராவுத்தர் என்பவருக்குச் சொந்தமான இரண்டு அடுக்கு வணிக வளாகம் பல ஆண்டுகளாக அந்த பகுதியில் பயன்படுத்தப்படாமல் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் மதுரையில் ஸ்மார்ட்சிட்டி பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. சமீபத்தில் தான் இந்தியாவின் சுத்தமான, பக்தர்களுக்கு பாதுகாப்பான சுற்றுலா புனித தலமாக மீனாட்சியம்மன் ஆலயம் இரண்டாவது பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், ஸ்மார்ட் சிட்டிக்கான பணிகள் நடைபெற்று வரும் இடத்திற்கு அருகே உள்ள கட்டடம் என்பதால் அந்த கட்டிடத்தை அகற்ற வேண்டி மாநகராட்சி சார்பாக 8 மாதங்களுக்கு முன்னதாகவே சையது ராவுத்தருக்கு உத்தரவு இடப்பட்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது. 

building collapse

இந்நிலையில் மீனாட்சியம்மன் கோயில் அருகே இருந்த அந்த கட்டிடம் திடீரென இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் கட்டிடத்தின் முன் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் இடுபாடுகளில் சிக்கி கொண்டன. பின்னர் அருகில் இருந்தவர்களால் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் மீட்புப் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.