மதுரை: பாலம் கட்டும் பணிக்காக நகர்த்தப்படும் 3,50,000 கிலோ அம்மன் கோவில்

 

மதுரை: பாலம் கட்டும் பணிக்காக நகர்த்தப்படும் 3,50,000 கிலோ அம்மன் கோவில்

பழமையான கோவில் என்பதால் அதனை இடிக்காமல் இந்த முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பணி தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

மதுரை நத்தம் பிரதான சாலையில் அமைந்துள்ளது பழமையான மந்தையம்மன் கோவில். அந்த பகுதியில் பறக்கும் பாலம் அமைக்க நிலம் கையகப்படுத்தப்பட்டு வருகிறது. இதில் கோவில் அமைந்துள்ள இடத்தில் 4 அடிக்கு மேல் இடிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதால், நவீன தொழில்நுட்ப முறையை பயன்படுத்தி கோவிலை 25 அடி நகர்த்தவும், 5 அடி உயர்த்தவும் பணிகள் நடைபெற்று வருகிறது.

மந்தையம்மன்

பழமையான கோவில் என்பதால் அதனை இடிக்காமல் இந்த முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பணி தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. 350 ஜாக்கிகளை கொண்டு கோவிலை 5 அடி உயர்த்தியுள்ளதாகவும், 150 ஜாக்கிகளை பயன்படுத்தி 25 அடி நகர்த்தும் பணியை துவங்கியிருப்பதாகவும் பொறியாளர் அன்பில் தரமலிங்கம் பேட்டியளித்துள்ளார்.

அம்மன்

மேலும் அவர், ஹரியானா மாநில நிறுவனத்தின் துணையுடன் இந்த பணிகள் இன்னும் 3 நாட்களில் நிறைவடையும் என தெரிவித்திருக்கிறார்.

இதையும் வாசிங்க

திருநம்பிகளுக்கு வேலை கொடுத்த அமேசான் நிறுவனம்; ஒரே பைக்கில் டெலிவரி!