மதுரை-பழனி-கோவை வழித்தடத்தில் மீண்டும் ரயில் சேவை துவக்கம்: சு. வெங்கடேசன் அறிவிப்பு..!

 

மதுரை-பழனி-கோவை வழித்தடத்தில் மீண்டும் ரயில் சேவை துவக்கம்: சு. வெங்கடேசன் அறிவிப்பு..!

15 ஆண்டுகளுக்கு பிறகு, மதுரை-பழனி-கோவை வழித்தடத்தில் ரயில் சேவை துவங்கவுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில்  பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளார்.

15 ஆண்டுகளுக்கு பிறகு, மதுரை-பழனி-கோவை வழித்தடத்தில் ரயில் சேவை துவங்கவுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில்  பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளார். அதில் அவர், மதுரை-பழனி-கோவை இடையே ரயில் சேவையை உருவாக்க வேண்டும் என்பது மதுரையில் உள்ள மக்களின் நெடுநாள் கோரிக்கையாக இருந்து வந்தது. இது குறித்து கடந்த ஆகஸ்ட் மாதம் மதுரை கோட்ட மேலாளருடன் நடத்திய பேச்சு வார்த்தையில் மூன்று மாதத்திற்குள் ரயில்சேவையை உருவாக்குவதாக அவர் உறுதியளித்தார். அதன் படி, மதுரை-பழனி-கோவை வழித்தடத்தில் ரயில் சேவை உருவாக்கப்பட்டுள்ளது. இதுவே மதுரை மக்களுக்கு தீபாவளி பரிசு’ என்று குறிப்பிட்டுள்ளார். 

 

மேலும், மதுரை ரயில் நிலையத்தில் வாகனங்கள் உள்ளே சென்று மக்களை ஏற்றி, இறக்கி வருவதற்கு கட்டணம் வசூலிக்கப்பட்ட நிலையில், அன்றைய கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் படி 6 நிமிடங்கள் ரயில் நிலையங்களினுள் இலவசமாக சென்று வர ரயில்வே நிர்வாகம்  அனுமதித்துள்ளது’ என்றும் பத்திரிகை செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.