மதுரை ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிப்பாய ஆயத்தமாகும் காளைகள் !

 

மதுரை ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிப்பாய ஆயத்தமாகும் காளைகள் !

15 ஆம் தேதி அவனியாபுரத்திலும், 16 ஆம் தேதி பாலமேட்டிலும், 17 ஆம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக் கட்டு நடைபெறும்.

மாட்டுப் பொங்கல் திருநாளன்று மதுரை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். தமிழகத்திலேயே அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மிகுந்த புகழ் பெற்றது. வரும் ஜனவரி மாதம் 15 ஆம் தேதி நடக்கவிருக்கும் இந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்குக் காளைகளைத் தயாராக்கும் பணி மும்முரப்படுத்த பட்டுள்ளது.

ttn

15 ஆம் தேதி அவனியாபுரத்திலும், 16 ஆம் தேதி பாலமேட்டிலும், 17 ஆம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக் கட்டு நடைபெறும். இதனைக் காண வெளிநாடுகளில் இருந்தும், தமிழ் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் மக்கள் திரள்வர். 

ttn

ஜல்லிக்கட்டு காளைகளைத் தயார் செய்யும் பணி வழக்கமாக 60 நாட்களுக்கு முன்னரே ஆரம்பிக்கும். அதன் படி, கடந்த நவம்பர் மாதமே நீச்சல் பயிற்சி, மண்ணை முட்டி சிதறடித்தல் மற்றும் வாடிவாசல் போன்ற மாதிரிகளை அமைத்து அதில் பாய விடுவது போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

ttn

அதுமட்டுமின்றி, மாடு பிடி வீரர்களும் 1 மாதத்திற்கு முன்னரே விரதம் இருந்து ஜல்லிக்கட்டுக் காளைகளை அடக்குவதற்குத் தயாராகி வருவர். இந்த ஆண்டும் வழக்கம் போல, விமர்சையாக நடக்கவிருக்கும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்குக் காளைகளை ஆயத்தப் படுத்தும் பணியும், காளையை அடக்க வீரர்கள் தயாராகும் பணியும் தொடங்கியுள்ளது.