மதுரை கோனார் சூப் கடை…புரோட்டா விற்காத அதிசய உணவகம்.

 

மதுரை கோனார் சூப் கடை…புரோட்டா விற்காத அதிசய உணவகம்.

மதுரை வடக்கு மாசி வீதியில் இருக்கும் கிருஷ்ணன் கோவில் எதிரில் 18 வருடம் முன்பு தெரு ஓரத்தில் சூப் கடை திறந்ததுதான் ஆரம்பம் முதலில் ரத்தப்பொரியல், எலும்பு சூப்,ஆட்டுக்கால் சூப் என்று மாலை வேளையில் மட்டும் இயங்கிய இந்தக் கடை இப்போது வாரத்தில் 6 நாட்கள் சக்கை போடு போடுகிறது.

குடும்ப உறுப்பினர்கள்தான் சமைக்கிறார்கள்.ஞாயிறு அன்று கடை விடுமுறை. காரணம் இவர்களுக்குத் தொழில் கறிக்கடை.

மதுரை வடக்கு மாசி வீதியில் இருக்கும் கிருஷ்ணன் கோவில் எதிரில் 18 வருடம் முன்பு தெரு ஓரத்தில் சூப் கடை திறந்ததுதான் ஆரம்பம் முதலில் ரத்தப்பொரியல், எலும்பு சூப்,ஆட்டுக்கால் சூப் என்று மாலை வேளையில் மட்டும் இயங்கிய இந்தக் கடை இப்போது வாரத்தில் 6 நாட்கள் சக்கை போடு போடுகிறது.

குடும்ப உறுப்பினர்கள்தான் சமைக்கிறார்கள்.ஞாயிறு அன்று கடை விடுமுறை. காரணம் இவர்களுக்குத் தொழில் கறிக்கடை.அதனால் ஞாயிறு அன்று அந்த வியாபாரத்தை கவனிக்க போய் விடுவார்கள்.அவர்களே கறிக்கடை நடத்துவதால் அசல் ஆட்டுக்கறியின் சுவையை மதுரைகாரர்களுக்குக் காட்டவே இந்தக் கடையைத் துவங்கி இருக்கிறார்கள்.

soup

மதியம் 12 முதல் மாலை 4.30 வரை சாப்பாடு.விலை 200 ரூபாய்.நீங்கள் உங்களுக்கு பிடித்த எந்த சைடிஷை வேண்டுமானாலும் செலக்ட் செய்து கொள்ளலாம்.அதற்கும் சேத்துத்தான் அந்த இருநூறு ரூபாய். குழம்புகள், ரசம்,மோர்,ஏதாவது ஒரு காய்.மீன் சிக்கன் இல்லை.

soup

பிரியாணியில் வெஜ் பிரியாணி, காலி பிரியாணி,மட்டன் பிரியாணி,கிட்னி பிரியாணி தருகிறார்கள். இங்கே புரோட்டா விறபனை இல்லை.
மாலையில்,இடியாப்பம்,ஊத்தப்பம்,கறி தோசை,வெங்காயக் கறி தோசை,குடல் கொத்து என்று ரகரகமாகத் தருகிறார்கள்.சூப் என்றால் நெஞ்சு சூப்,பாயா சூப்,எலும்பு சூப்,குடல் சூப்,ஈரல் சூப் , சுவரொட்டி சூப்,பாயா சூப் என்று பல வெரைட்டிகள் தரப்படுகிறது.இதில்,சுவரொட்டி,பாயா,ஈரல்,சுவரொட்டி சூப்கள் 90 ரூபாய்.மற்ற அனைத்தும் 25 ரூபாய் விலை வைத்து இருக்கிறார்கள்.

soup

தமிழகத்தில் நீங்கள் எங்குமே கேள்விப்படாத கறி வகைகளை இங்கே பார்க்கலாம்.உதாரணத்திற்கு மூளைக் குழம்பு,வெங்காயக்கறி,நல்லி சாப்ஸ்,சங்கு ( கழுத்து ) மிக்ஸ்டு தோசை,சிலிப்பி என்று பெரிய லிஸ்டே இருக்கிறது.ரோஸ்ட் என்றால்,குடல் , சுவரொட்டி ,தலைக்கறி, நல்லி,பாயா,ஈரல் என்று ஏழெட்டு ரோஸ்ட்கள்

food

இதில் எண்ணெய் சுக்கா என்று ஒரு ஐட்டம் வைத்திருக்கிறார்கள் அபாரம்.
புரட்டாசி மாதம் பெரிதாக வியாபாரம் இல்லாததால் அந்த நேரத்தில்தான் இப்படி புதுப்புது ஐட்டங்களை செய்து பார்க்கும் ஆர் அண்ட் டி நடக்கிறது.
குடலோடு இடியாப்பம் சேர்த்து தோசைக் கல்லில்ன்போட்டுக் கொத்தி குடல் கொத்து என்று தருகிற ஐடியாக்கள் எல்லாம் புரட்டாசி மாதக் கண்டுபிடிப்புகள்தான்.அநேகமாக தமிழகத்தின் ஒன்லி மட்டன் ஓட்டல் இதுவாகத்தான் இருக்க வேண்டும்