மதுரை இஸ்லாமியர் மரணம் குறித்து விசாரணை! – சு.வெங்கடேசன் வலியுறுத்தல்

 

மதுரை இஸ்லாமியர் மரணம் குறித்து விசாரணை! – சு.வெங்கடேசன் வலியுறுத்தல்

காவல்துறையின் தாக்குதலால் இறந்த அப்துல் ரஹீமின் உடலை ஏற்றிய வாகனத்தோடு சாலையின் குறுக்கே வைத்து போராட்டம்” என்ற தொலைக்காட்சியின் செய்தியின் வழிதான் இந்தக் கொடிய நிகழ்வை அறிய முடிந்தது. உடனே கருப்பாயூரணியில் இருக்கும் தோழர்களைத் தொடர்புகொண்டு அங்கு என்ன நடந்தது என்பதை விசாரித்துக்கொண்டிருந்தேன்.

மதுரையில் போலீஸ் அடித்து இறந்ததாக கூறப்படும் அப்துல் ரஹீம் மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும், தாக்குல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மதுரை எம்.பி வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“காவல்துறையின் தாக்குதலால் இறந்த அப்துல் ரஹீமின் உடலை ஏற்றிய வாகனத்தோடு சாலையின் குறுக்கே வைத்து போராட்டம்” என்ற தொலைக்காட்சியின் செய்தியின் வழிதான் இந்தக் கொடிய நிகழ்வை அறிய முடிந்தது. உடனே கருப்பாயூரணியில் இருக்கும் தோழர்களைத் தொடர்புகொண்டு அங்கு என்ன நடந்தது என்பதை விசாரித்துக்கொண்டிருந்தேன். இதற்கிடையில் தோழர் ஆதவன் தீட்சண்யா தொலைப்பேசியில் அழைத்து விசயத்தைச் சொன்னார். “அதனைப்பற்றித்தான் விசாரித்துக்கொண்டிருக்கிறேன் தோழர்” என்று கூறி,ரபீக் ராஜாவின் தொலைப்பேசி எண்ணைக் கேட்டேன். அப்பொழுதுதான் ரபீக் ராஜா சென்னையில் இருக்கும் தகவலைச் சொன்னார். ரபீக் ராஜாவிடமும் பேசினேன்.

abdul-raheem

சென்னை மாநகராட்சி ஆணையாளர் திரு பிரகாஷ் அவர்களிடம் பேசி, ”மதுரைக்குச் செல்ல விரைவாக அனுமதிக்கடிதம் கொடுங்கள்” என்று கேட்டுக்கொண்டேன். ”அலுவலகம் போய்க்கொண்டிருக்கிறேன். போனதும் கொடுத்துவிடுகிறேன்” என்றார் ஆணையாளர். தகவலை ரபீக் ராசாவிடமும் தெரிவித்தேன்.

இதற்கிடையில் நடந்த சம்பவம் பற்றி வெவ்வேறான கூற்றுகள் வெளிவரத் தொடங்கின. முக்கிய நாளிதழின் இணையதளத்தில் “கருப்பாயூரணியில் போலீஸார் ஆய்வுப் பணியின்போது, இறைச்சிக் கடைக்காரர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்” எனச் செய்தி வெளியானது. காவல்துறை அதிகாரிகளும் இந்த செய்தியைத்தான் வெவ்வேறு விதத்திலே சொன்னார்கள். பொதுச்சமூகத்துக்கு என்ன சொல்லவேண்டுமோ அதனை வேகமாகச் சொல்லும் முயற்சியில் ஊடகங்கள் ஈடுபட்டுக்கொண்டிருந்தன.

 

இதற்கிடையில் அந்தக் குடும்பம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க “உடற்கூறாய்வு செய்யப்படாமல் நல்லடக்கம் செய்ய அனுமதிக்ப்பட்டதாகக் கூறப்பட்டது. எல்லாவகையிலும் இந்த மரணம் காவல்துறையின் செயல்பாட்டோடு நேரடியாகத் தொடர்புடையது. அப்படியிருக்கும்போது இறப்பின் உண்மைத்தன்மை அறிய உடற்கூறாய்வு செய்யப்படுவது மிக அவசியம். ஆனால் காவல்துறையோ உடற்கூறாய்வு செய்யாமலேயே அடக்கம் செய்ய அனுமதித்துள்ளது. தமிழக அரசே, அப்துல் ரஹீமின் மரணங்குறித்து முறையான விசாரணை நடத்து. தாக்குதல் நடத்திய காவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடு” என்று கூறியுள்ளார்.