மதுரை அரசு மருத்துவமனையில் மீன் வியாபாரம் அமோகம்! ஹாஸ்பிட்டல் சந்தை கடையான கொடுமை!!

 

மதுரை அரசு மருத்துவமனையில் மீன் வியாபாரம் அமோகம்! ஹாஸ்பிட்டல் சந்தை கடையான கொடுமை!!

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 2வது மாடி வரை மீன் வியாபாரம் செய்ய அனுமதி அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 2வது மாடி வரை மீன் வியாபாரம் செய்ய அனுமதி அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மதுரைக்கு பெயர்போனது ராஜாஜி அரசு மருத்துவமனை. இங்கு தினமும் நூற்றுக்கும் மேற்பட்டோர் வெளி மாவாட்டங்களிலிருந்து வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இத்தகைய சிறப்புகள் வாய்ந்த மருத்துவமனையில் மீன் விற்பனை செய்யப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

fish

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின், மேல்தளத்தில் உள்ள சிறப்பு சிகிச்சை பிரிவில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு அவர்கள் இருப்பிடம் தேடி வந்து, மீன் விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மீன் விற்பனை செய்யும் ஒருவர், தனது இருசக்கர வாகனத்தில் மருத்துவமனை மேல் தளத்திற்கு சென்று மீன்களை மருத்துவர் மற்றும் செவிலியர்களுக்கு வழங்கிவிட்டு செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்துகிறது. நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும் மருத்துவமனையில் மீன் விற்பனையா என நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கொந்தளிக்கின்றனர். 

இதுகுறித்து மருத்துவமனை டீன் வனிதாவிடம் கேட்டபோது, மருத்துவமனையில் மீன் விற்பனை செய்யப்படவில்லை என்றும், அந்த மீன் வண்டி மேல் தளத்திலுள்ள மருத்துவமனை உணவகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது என்றும் விளக்கமளித்துள்ளார்.