மதுரை,ராமநாதபுரம், கன்னியாகுமரியில் மழைக்கு வாய்ப்பு! – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மதுரை,ராமநாதபுரம், கன்னியாகுமரியில் மழைக்கு வாய்ப்பு! – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் நேற்று அக்னி நட்சத்திரம் தொடங்கியதையொட்டி மாநிலத்தின் பல பகுதிகளில் வெயில் மக்களை வறுத்தெடுத்து வருகிறது. அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு மதுரை, தேனி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

rain-89

மதுரை, கரூர், திருச்சி, வேலூரி, தருமபுரி, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் நாளை வெயில் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி மாவட்டம் இரணியலில் அதிகபட்சமாக 16 மிமி மழை அளவு பதிவாகி உள்ளது. தென் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் வழக்கத்தை விட வெப்பநிலை 4 முதல் 5 டிகிரி செல்ஷியஸ் அதிகமாக இருக்கும். 40 டிகிரி செல்ஷியசையும் தொடலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இதனால், வயதானவர்கள் பகல் நேரத்தில் வெளியே வர வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.