மதுரையில் 3625 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பு!

 

மதுரையில்  3625 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பு!

22 ஆயிரமாக இருந்த நிலையில், 24 ஆயிரமாக அதிகரித்துள்ளது.  இதுவரை 24,065  பேர் பலியாகி  உள்ளனர் .   ஒரே நாளில் உலகளவில் சுமார் 2 ஆயிரம் பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.  

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்  உருவான  கொரோனா வைரஸ் தற்போது  199  நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய்  தொற்றிலிருந்து  தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.  இதுவரை உலகம் முழுவதும் 5 லட்சத்து 29 ஆயிரத்து 614  பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

tt

இதனால்  பல்வேறு நாடுகளின் எல்லைகள் மூடப்பட்டுள்ளன.  பல மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  மேலும் கோயில்கள், தியேட்டர்கள், வணிக வளாகங்கள், பூங்காக்களை  வரும்  ஏப்ரல் 14 ஆம் தேதி மூடவைக்கக்கோரி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.  உலக அளவில் கொரோனா வைரசால் பலியானோர்  எண்ணிக்கை 22 ஆயிரமாக இருந்த நிலையில், 24 ஆயிரமாக அதிகரித்துள்ளது.  இதுவரை 24,065  பேர் பலியாகி  உள்ளனர் .   ஒரே நாளில் உலகளவில் சுமார் 2 ஆயிரம் பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.  

ttn

இந்தியாவைப் பொறுத்தவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 16ஆகவும்,  பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 633 ஆகவும் அதிகரித்துள்ளது.  இதில் 44 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் ஒருவர் இறந்துள்ள நிலையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது.

ttn

இந்நிலையில்  மதுரையில் 3,625 பேர் தனிமைப்படுத்தப்பட்டுக் கண்காணிக்கப்பட்டு வருவதாக அம்மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். இதில் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டவர்கள், அவர்களின் குடும்பத்தார், அவர்களுடன் பழகியவர்கள் என நகரில் 1350 பேரும், புறநகரில் 2275 பேரும் என மொத்தம் 3625 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுக் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.