மதுரையில் 2 காவலர்களுக்கு கொரோனா: மூடப்பட்ட காவல் நிலையம்!

 

மதுரையில் 2 காவலர்களுக்கு கொரோனா: மூடப்பட்ட காவல் நிலையம்!

பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை  1885 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24-ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில்  வேகமாக பரவி வரும்  கொரோனாவை கட்டுபடுத்தும் முயற்சியில்  மத்திய, மாநில அரசுகள்  இறங்கியுள்ளன. இதனால் நாடு முழுவதும் ஊரடங்கை அமல்படுத்தப்பட்டு உள்ளது. தமிழகத்தில் மேலும் 64பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை  1885 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24-ஆக அதிகரித்துள்ளது. 

tt

மதுரை மாநகர் தெற்கு வாசல் காவல்நிலையத்தில் பணியாற்றும் சிறப்பு சார்பு ஆய்வாளர் மற்றும் போக்குவரத்து தலைமை காவலர்  ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதையடுத்து அங்கு பணியாற்றும்  71 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. 

tt

இந்நிலையில் மதுரை மாநகர காவல் ஆணையர்  தெற்கு வாசல் காவல்நிலையத்திற்கு காவல்துறையினர் யாரும் பணிக்கு செல்ல வேண்டாம் என உத்தரவிட்டுள்ளார்.  இதையடுத்து அந்த காவல்நிலையம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யபட்டது. 

tt

மேலும் காவல் நிலையம் மூடப்பட்டு மின் விளக்குகளும் அணைக்கப்பட்டன. நாளை முதல் தற்காலிகமாக மாற்று இடத்தில் காவல்நிலைய அலுவலகப் பணி நடைபெற உள்ளதாக  போலீசார் தரப்பில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.