மதுரையில் மசமச… அதிமுகவில் கசமுச..!

 

மதுரையில் மசமச… அதிமுகவில் கசமுச..!

உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பே அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் தான், உள்ளாட்சி தேர்தலில் கட்சியினர் பயந்து வேலை செய்வார்கள் என வலியுறுத்தி இருக்கிறார்களாம்.

மதுரை தொகுதியில் அ.தி.மு.க., வேட்பாளர் ராஜ் சத்யன் 1.40 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனிடம் மண்ணைக் கவ்வினார்.  இவ்வளவுக்கும் ஆளுங்கட்சியினர் ஓட்டுக்கு 300 ரூபாய் வரை பட்டுவாடா செய்தும் பலருக்கும் பணம் போய் சேரவில்லை.ADMK

தேர்தல் பொறுப்பாளரான கூட்டுறவு அமைச்சர் செல்லூர் ராஜுவோட மேற்கு தொகுதியிலேயே வெங்கடேசனுக்கு 82 ஆயிரம் ஓட்டுகளும் அதிமுகவுக்கு, 55 ஆயிரம் ஓட்டுகளும் தான் கிடைத்திருக்கிறது. admk

இதனால், தொகுதி, வார்டுகள் வாரியாக ஓட்டு விபரங்களை ஆளுங்கட்சியினர் சேகரித்து, தேர்தல் வேலைகளில் மசமசவென இருந்தவர்களை பட்டியலையும் சேர்த்து முதல்வர்,  துணை முதல்வருக்கு அனுப்பி வைத்து இருக்கிறார்களாம். உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பே அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் தான், உள்ளாட்சி தேர்தலில் கட்சியினர் பயந்து வேலை செய்வார்கள் என வலியுறுத்தி இருக்கிறார்களாம்.