மதுப்பாட்டில் கொடுக்கலாம் என்ற உத்தரவுக்கு இடைக்கால தடை: அதிர்ச்சியில் குடிமகன்கள்!

 

மதுப்பாட்டில் கொடுக்கலாம் என்ற உத்தரவுக்கு இடைக்கால தடை: அதிர்ச்சியில் குடிமகன்கள்!

இதனால் குடிமகன்கள் விரக்தியின் உச்சத்தில் உள்ளனர். சிலர் தற்கொலை செய்து கொள்ளும் நிலைமைக்கு சென்றுள்ளனர்.

கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் நாடு முழுவதும் வரும் 14 ஆம் தேதி வரை 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இதனால் மக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியே வர  வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதனால் ஏழை எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் டாஸ்மாக் மூடப்பட்டுள்ளது. இதனால் குடிமகன்கள் விரக்தியின் உச்சத்தில் உள்ளனர். சிலர் தற்கொலை செய்து கொள்ளும் நிலைமைக்கு சென்றுள்ளனர்.

 

இதனால் இதை தடுக்கும் நோக்கில் மது குடிக்காவிட்டால் உடல் அளவிலும் மனதளவிலும் பாதிப்பு ஏற்படுவோருக்கு பாஸ் வழங்கப்படும் என்றும்  குடிநோயாளிகள் மருத்துவரை அணுகி மருந்து குறிப்பு சீட்டை பெற்று அடையாள அட்டையுடன் மத்திய கலால் வரித்துறை அதிகாரிகளிடம் காட்டி  மதுக்கடைகளில் குறிப்பிட்ட அளவு மது பாட்டில்கள் வழங்கப்படும் என்று கேரள அரசு அறிவித்தது. இதற்கு கேரள மாநில அரசு மருத்துவர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்தது. 

 

இந்நிலையில் இதுகுறித்து தாக்கல்செய்த பொதுநலமனுவில், ஊரடங்கு காலத்தில் மருத்துவர்களின் பரிந்துரைப்படி மது வழங்கலாம் என்ற கேரள அரசின் உத்தரவுக்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.