மதுபானங்கள் திருடி விற்பனை: டாஸ்மாக் மேற்பார்வையாளர் உள்பட இருவர் கைது!

 

மதுபானங்கள் திருடி விற்பனை: டாஸ்மாக் மேற்பார்வையாளர் உள்பட இருவர் கைது!

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட  உத்தரவிட்டது. இதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில்  மேல்முறையீடு செய்துள்ளது

ஊரடங்கு காரணமாக கடந்த 40 நாட்களாக மூடபட்டிருந்த டாஸ்மாக் கடைகள் கடந்த 7 ஆம் தேதி திறக்கப்பட்டது. இதற்கு அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

tt

மதுபான விற்பனையின்போது, எந்தவித சமூக இடைவெளியும் பின்பற்றப்படவில்லை என உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட அவசர வழக்கில் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட  உத்தரவிட்டது. இதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில்  மேல்முறையீடு செய்துள்ளது.

tt

இந்நிலையில் திருச்சி துவாக்குடி அருகே உள்ள கீழ மாங்காவனம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்கள் திருடி விற்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கடையின் மேற்பார்வையாளர் கார்த்திக்கேயன் (42), அவருக்கு உதவியாக இருந்த கார்த்திகேயன் (45) ஆகிய இருவரிடமிருந்து 103 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும்  இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.