மதுக்கடைகளை மூடிவிட்டால் மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்துவிடுமா என்ன? ரஜினியின் கருத்துக்கு திருமா பதிலடி

 

மதுக்கடைகளை மூடிவிட்டால் மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்துவிடுமா என்ன? ரஜினியின் கருத்துக்கு திருமா பதிலடி

கொரோனா வைரஸை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் கடந்த 43 நாட்களுக்கு மேலாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்தன. ஆனால் தமிழக அரசுக்கு ஏற்பட்ட நிதி நெருக்கடியின் காரணமாக கடந்த 7 ஆம் தேதி டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. ஆனால் டாஸ்மாக்குகளில் சமூக இடைவெளி பின்பற்றப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து, டாஸ்மாக்குகளை மூட நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.  

ttn

இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வரவுள்ளது. இந்நிலையில் இது குறித்து நடிகர் ரஜினிகாந்த் அவரது ட்விட்டர் பக்கத்தில், “இந்த நேரத்தில் அரசு டாஸ்மாக் கடைகளை மறுபடி திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்து விட வேண்டும். தயவுகூர்ந்து #கஜானாவை_நிரப்ப_நல்ல_வழிகளை_பாருங்கள்” என்று குறிப்பிட்டிருந்தார்.

 

 

இதுகுறித்து கருத்து தெரிவித்திருக்கும் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல். திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில், “வழக்கம்போல நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் கருத்து விவாதங்களுக்கு உள்ளாகியிருக்கிறது. முழுஅடைப்பின்போது  மதுக்கடைகளைத் திறந்த தமிழக அரசை அவரால்  வெளிப்படையாகக் கண்டிக்க இயலவில்லையே ஏன்? மதுக்கடைகளை மூடிவிட்டால் மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்துவிடுமா என்ன? #ரஜினி #மதுக்கடை” எனக்குறிப்பிட்டுள்ளார்.