மதிப்பிழக்கப்பட்ட 1000,500 ரூபாய் நோட்டுகள் மதுக்கடைக்களில் மாற்றம்?!

 

மதிப்பிழக்கப்பட்ட 1000,500 ரூபாய் நோட்டுகள் மதுக்கடைக்களில் மாற்றம்?!

உயர் மதிப்புகளை கொண்ட 1000, 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்து புதிய 2000,500 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட்டது.

கடந்த 2018 ஆம் ஆண்டு மத்திய அரசு பணமதிப்பிழப்பை அமல்படுத்தியது. அதன் படி, உயர் மதிப்புகளை கொண்ட 1000, 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்து புதிய 2000,500 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட்டது. புதிய நோட்டுகளாக மாற்றுவதற்கு மக்கள் மிகவும் சிரமபட்டனர். பழைய ரூபாய் நோட்டுகளை வாங்க வேண்டாம் என்று அறிவிப்பு வெளியான மறு நாளே அனைத்து டாஸ்மாக்குகளுக்கும் அருவுறுத்தப்பட்டது. இருப்பினும், மதுக்கடைகள் பழைய  1000,500 ரூபாய் நோட்டுகளை வாங்கியதாக வருமான வரித்துறையினர் கண்டுபிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ttn

அதாவது, பணமதிப்பிழப்பின் போது மக்கள் பலர் வங்கியில் வரிசைக்கு நிற்பதற்கு பதிலாக டாஸ்மாக் கடைகளில் அந்த பணத்தை வாங்கியதும், தமிழகத்தில் உள்ள 6,323 கடைகள் பழைய நோட்டுகளை வாங்கியதும், டாஸ்மாக்கில் பார் வைத்திருக்கும் உரிமையாளர்கள் அதிக அளவிலான மதிப்பிழக்கபட்ட பணத்தை வங்கியில் செலுத்தியதும் தெரிய வந்துள்ளது.