மதத்தை காரணம் காட்டி உணவை கேன்சல் செய்த வாடிக்கையாளருக்கு நோட்டீஸ்!

 

மதத்தை காரணம் காட்டி  உணவை கேன்சல் செய்த வாடிக்கையாளருக்கு நோட்டீஸ்!

இந்து அல்லாத ஒருவர் உணவு கொண்டு வந்ததால்  ஜொமோட்டோவில்  ஆர்டர் செய்த உணவை  கேன்சல் செய்தவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

மதத்தை காரணம் காட்டி  உணவை கேன்சல் செய்த வாடிக்கையாளருக்கு நோட்டீஸ்!

மத்திய பிரதேசம்: இந்து அல்லாத ஒருவர் உணவு கொண்டு வந்ததால்  ஜொமோட்டோவில்  ஆர்டர் செய்த உணவை  கேன்சல் செய்தவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர்  ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான ஜொமோட்டோவில் உணவு ஆர்டர் செய்தார். ஆனால் அவர் தனது உணவை திடீரென்று  கேன்சல் செய்துள்ளார். இதுகுறித்து அவர் தனது  டிவிட்டர் பக்கத்தில், ‘இந்து அல்லாத ஒருவர் உணவை வழங்குவதால் ஜொமோட்டோவில் ஆர்டர் செய்த உணவை நான் கேன்சல் செய்கிறேன். நான் ஆளை மாற்றி அனுப்பக் கோரினேன்.ஆனால்  அதை  அவர்கள் மறுத்ததுடன் என் பணத்தையும் திரும்பத் தரவில்லை.  என்னை நீங்கள் கட்டாயப்படுத்த முடியாது. எனக்கு பணம் திரும்ப வேண்டாம். நான் உணவை கேன்சல் செய்கிறேன்’ என்று பதிவிட்டுள்ளார். 

அவரது  பதிவிற்குப் பதிலளித்துள்ள ஜொமோட்டோ நிறுவனம்,  உணவுக்கு மதம் எதுவும் கிடையாது. உணவே ஒரு மதம் தான் என்று பதிலடி கொடுத்தது. இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. உணவில் கூடமதத்தை  கொண்டுவருவது தவறான உதாரணம் என்று பலர் கருத்து கூறி வந்தனர்.

இந்நிலையில் மக்களின் மத நம்பிக்கைகளைப் புண்படுத்துவது போல பேசிய அந்த நபருக்கு போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். மேலும் அந்த நபர் வட்டாட்சியர் முன் ஆஜராகவும்  நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.