மதச்சார்பின்மையை பாதுகாப்பது நமது கடமை: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்

 

மதச்சார்பின்மையை பாதுகாப்பது நமது கடமை: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்

மதச்சார்பின்மையை பாதுகாக்க வேண்டியது நமத்து கடமை என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்

டெல்லி: மதச்சார்பின்மையை பாதுகாக்க வேண்டியது நமத்து கடமை என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்  .பி.பரதனின்  2ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு டெல்லியில் நடைபெற்ற கூடத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொண்டார்.

கூட்டத்தில் அவர் பேசியதாவது: நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும் ராணுவம், மத சார்பற்ற தன்மைக்கு சிறந்த உதாரணமாக திகழ்கிறது. அதில், பிரிவினைவாத கோஷம் ஏற்பட்டு, அதன் புனித தன்மையை கெடுத்துவிடக் கூடாது என்றார்.

பாபர் மசூதி இடிப்பு நாட்டின் மதசார்பின்மைக் கோட்பாட்டுக்கு எதிரானது. அது மத நல்லிணக்கத்தையும் அமைதியையும் குலைக்கும் செயல் என்று தெரிவித்த அவர், இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்கியவர்கள் தீர்க்கதரிசனத்துடன் மதச்சார்பின்மைக் கொள்கையை உருவாக்கியுள்ளதாகவும், இதனை பாதுகாக்க வேண்டியது நமது கடமை என்றும் தெரிவித்தார்.

நீதித்துறை அதன் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். அரசியல் சாசனத்தில் உள்ள, மதசார்பற்ற தன்மையை பேணி பாதுகாக்கும் பொறுப்பு நீதித்துறைக்கு உள்ளது என்றும் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.