மதங்களை கடந்து அத்திவரதர் தரிசனத்துக்கு உதவி செய்த தமீமுன் அன்சாரி! 

 

மதங்களை கடந்து அத்திவரதர் தரிசனத்துக்கு உதவி செய்த தமீமுன் அன்சாரி! 

கூட்ட நெரிசல் காரணமாக தொலைதூர மாவட்ட மக்கள் வி.ஐ.பி. தரிசனத்துக்கு செல்ல  அந்தந்த தொகுதி எம்எல்ஏக்களின் சிபாரிசு கடிதங்களை வாங்கி அத்திவரதரை தரிசிக்க படையெடுத்துள்ளனர்.

அத்திவரதரை தரிசிக்க தமீமுன் அன்சாரி கடிதம் எழுதி கொடுத்து சிபாரீசு செய்தது பல்வேறு தரப்பினரின் பாராட்டுகளை பெற்றுள்ளது. 

கடந்த 1-ம் தேதி முதல் அத்திவரதர் முதலில் படுத்த கோலத்திலும், தற்போது நின்ற கோலத்திலும் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். 

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோயிலில் சுமார் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை, கோயில் குளத்தில் வைக்கப்பட்டிக்கும் அத்தி வரத பெருமாள் வெளியே எடுக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார்.

thamimun ansari
அத்தி வரதர் வைபவம் இந்தாண்டு ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 17ம் தேதி வரை நடைப்பெறும் என அறிவிக்கப்பட்டு தற்போது வெகு விமர்சையாக நடைப்பெற்று வருகின்றது. ஜூலை ஒன்றால் தேதி முதல் இன்று வரை அத்திவரதரை தரிசிக்க பக்தர்கள் இரவு, பகல் பாராமல் வருகை தந்துக்கொண்டிருக்கின்றனர். அத்திவரதரை தரிசிக்க இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில் கூட்ட நெரிசல் அதிகரித்துவருகிறது. 

கூட்ட நெரிசல் காரணமாக தொலைதூர மாவட்ட மக்கள் வி.ஐ.பி. தரிசனத்துக்கு செல்ல  அந்தந்த தொகுதி எம்எல்ஏக்களின் சிபாரிசு கடிதங்களை வாங்கி அத்திவரதரை தரிசிக்க படையெடுத்துள்ளனர். இந்நிலையில் நாகப்பட்டினம் மற்றும் சிக்கலை சேர்ந்த இளைஞர்கள் எம்எல்ஏ தமீமுன் அன்சாரியிடம் சென்று, தரிசனத்துக்கு ஏற்பாடு செய்யுங்கள் என்று கேட்டுள்ளனர். உடனே அன்சாரியும், தனது லட்டர் பேடை எடுத்து, பரிந்துரை கடிதத்தை எழுதி அவர்களிடம் கொடுத்தார். அதை பெற்றுக் கொண்ட இளைஞர்கள் மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்து அன்சாரிக்கு நன்றி தெரிவித்துவிட்டு அத்திவரதர் தரிசனத்துக்கு புறப்பட்டனர். மதங்களை கடந்து தொகுதி மக்களை திருப்தியடையவைத்த அன்சாரியின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.