மதகு உடைந்து வெளியேறிய தண்ணீர்.. மணல் மூட்டை அணைக்கட்டி பாதிப்பைத் தடுத்த இளைஞர்கள் !

 

மதகு உடைந்து வெளியேறிய தண்ணீர்.. மணல் மூட்டை அணைக்கட்டி பாதிப்பைத் தடுத்த இளைஞர்கள் !

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்து உள்ள சத்தியமங்கலம் கிராமத்தில் பெரிய ஏரி ஒன்று உள்ளது. 200 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள அந்த ஏரி கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் முழு கொள்ளளவை எட்டியது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்து உள்ள சத்தியமங்கலம் கிராமத்தில் பெரிய ஏரி ஒன்று உள்ளது. 200 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள அந்த ஏரி கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் முழு கொள்ளளவை எட்டியது. சமீபத்தில் பெய்த மழையின் போதும், இந்த ஏரியின் நீர்மட்டம் உயர்ந்தது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பலகிராமங்களுக்கு இந்த ஏரி தண்ணீர் அதரமாக விளங்குகிறது. இந்து ஏரியில் மதகில் நேற்று முன் தினம் சிறியதாக உடைப்பு ஏற்பட்டுள்ளது. அதிலிருந்து நீர் வெளியேறுவதைக் கண்ட மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

ttn

சற்றும் யோசிக்காமல், அப்பகுதியில் இருக்கும் இளைஞர்கள், அந்த உடைந்த மதகை மணல் மூட்டைகள் கொண்டு அடைத்தனர். இதனால், அதன் மூலம் வெளியேறும் நீரின் அளவு குறைந்துள்ளது. அந்த மதகு பெரிய அளவில் உடைந்திருந்தால் பெரும் அளவு சேதம் அடைந்திருக்கும். இதனையடுத்து, கிராம அதிகாரிகளும் பொதுப்பணித்துறை அதிகாரிகளும் அந்த உடைந்த மதகைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இளைஞர்களின் இந்த செயலால், அப்பகுதியில் நிகழவிருந்த பெரும் விபத்து தடுக்கப்பட்டுள்ளது.