மண்டியிட்ட மாங்கா; பாமகவை கலாய்க்கும் நெட்டிசன்கள்

 

மண்டியிட்ட மாங்கா; பாமகவை கலாய்க்கும் நெட்டிசன்கள்

திராவிட கட்சிகளோடு கூட்டு வைக்கமாட்டேன் என்று கூறிய பாமக, அதிமுகவுடன் இணைந்ததை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

சென்னை: திராவிட கட்சிகளோடு கூட்டு வைக்கமாட்டேன் என்று கூறிய பாமக, அதிமுகவுடன் இணைந்ததை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

அதிமுக அரசாங்கத்தை தீவிரமாக விமர்சித்து வந்த பாமக இன்று அந்த கட்சியோடே கூட்டு வைத்திருக்கிறது. மக்களவை தேர்தலில் அதிமுக உடன் கூட்டணி அமைத்த பாமகவுக்கு 7 தொகுதிகளும், 1 மாநிலங்களவை தொகுதிகளும் வழங்குவதாக உடன்படிக்கை செய்யப்பட்டுள்ளது. 10 கோரிக்கைகளை முன்வைத்து இந்த கூட்டணிக்கு சம்மதம் தெரிவித்ததாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார். இந்நிலையில் திராவிட கட்சிகளோடு கூட்டு வைக்கமாட்டேன் என தொடர்ந்து கூறி வந்த பாமக, அதிமுகவுடன் கூட்டணி வைத்ததை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

trend

மண்டியிட்ட மாங்கா என்ற ஹாஸ்டேக்கில் பாமகவை மரண கலாய் கலாய்க்கிறார்கள்.