மணிரத்னம் மகனுக்கு கொரோனாவா? வைரலாகும் தனிமை அறையில் இருக்கும் வீடியோ

 

மணிரத்னம் மகனுக்கு கொரோனாவா? வைரலாகும் தனிமை அறையில் இருக்கும் வீடியோ

பிரபல இயக்குனர் மணிரத்தினம் மகன் நந்தன் கடந்த ஐந்து நாட்களாக தனிமையாக இருப்பதால் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளதா என்ற வதந்தி பரவி வருகிறது.

இது குறித்து வீடியோ ஒன்றை நடிகை சுஹாசினி வெளியிட்டுள்ளார். தனது மகன் நந்தன் கடந்த 18ஆம் தேதி லண்டனில் இருந்து திரும்பி வந்ததாகவும் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்றாலும் அவருடைய பாதுகாப்பு மற்றும் மற்றவர்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கடந்த 5 நாட்களாக தனிமையில் இருப்பதாகவும் கூறியுள்ளார்.