மணிரத்னம் உள்ளிட்ட 49 பேரின் தேசத் துரோக வழக்கைத் திரும்பப் பெற வேண்டும்: மு.க ஸ்டாலின் கண்டனம்.

 

மணிரத்னம் உள்ளிட்ட 49 பேரின் தேசத் துரோக வழக்கைத் திரும்பப் பெற வேண்டும்: மு.க ஸ்டாலின் கண்டனம்.

பிரபல இயக்குநரான மணிரத்னம் உள்ளிட்ட 49 பேர், சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகளைத் தடுத்து நிறுத்துங்கள் என்று பிரதமருக்குக் கடிதம் எழுதினர்.

பிரபல இயக்குநரான மணிரத்னம் உள்ளிட்ட 49 பேர், சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகளைத் தடுத்து நிறுத்துங்கள் என்று பிரதமருக்குக் கடிதம் எழுதினர். இதனைக் கண்டித்த மத்திய அரசு கடிதம் எழுதிய 49 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்தது. 

MK Stalin

இந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின், இந்திய ஜனநாயகத்தையும் அரசியல் சட்டத்தின் அடிப்படைக் கூறுகளையும் காப்பாற்றிட, 49 பேருக்கு எதிரான தேசத் துரோக வழக்கை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 

 மேலும், வரலாற்று ஆய்வாளர்  இயக்குநர் மணிரத்னம், நடிகை ரேவதி போன்ற சமூக அக்கறை உள்ள கலைஞர்களைத் தேசத் துரோகிகள் என்று சொல்வதை விடப் பேரபாயம் வேறு எதுவும் இல்லை என்றும் சர்வாதிகாரத்தைக் கையில் எடுத்தவர்கள், ஜனநாயகத்தின் முன்பு படுதோல்வி அடைந்ததுதான் இதுவரை வரலாறு என்றும் மத்திய அரசைக் கண்டித்து ட்வீட் செய்துள்ளார்.