மணிரத்னம் உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீது தேசத்துரோக வழக்கு: குரல் கொடுக்கும் எழுத்தாளர் சங்கம்!

 

மணிரத்னம் உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீது தேசத்துரோக வழக்கு: குரல் கொடுக்கும் எழுத்தாளர் சங்கம்!

அரசை விமர்சிப்பதால் மட்டும் ஒருவர் தேசதுரோகி என்று முத்திரை  குத்தப்படுவதை ஏற்க முடியாது.

 பிரதமருக்கு கடிதம் எழுதிய 49 பிரபலங்கள் மீது தேசத்துரோக வழக்கு பதியப்பட்டதற்குத் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கம்  கண்டனம் தெரிவித்துள்ளது.

modi

கடந்த ஜூலை மாதம் நாட்டில் சிறுபான்மை மக்கள் தாக்கப்படுவது உள்ளிட்ட சில பிரச்னைகள் குறித்து பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதிய 49 பிரபலங்கள்  கடிதம் எழுதினர். அதில், ‘அரசை விமர்சிப்பதால் மட்டும் ஒருவர் தேசதுரோகி என்று முத்திரை  குத்தப்படுவதை ஏற்க முடியாது. நாட்டின் ஒரு குடிமகன்  தனது சொந்த நாட்டிலேயே  உயிர் பயத்தில்  வாழும் நிலை ஏற்பட கூடாது’ என்று குறிப்பிட்டு இருந்தனர். 
தற்போது பிரதமருக்கு கடிதம் எழுதிய 49 பிரபலங்கள் மீதும் தேசத்துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் இயக்குநர் மணிரத்னம், அனுராக் காஷ்யப், கொங்கனா சென், அபர்ணா சென், ஆகியோரும் உள்ளனர். 

modi

இந்நிலையில் மத்திய அரசின் இந்த செயலுக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கம்  கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், சமூக பிரச்னையை பிரதமரின் கவனத்திற்குக் கொண்டுசெல்வது வழக்கமான ஒன்று. பொறுப்பான குடிமக்களின் ஜனநாயக செயல்பாடுகளைப் பொருட்படுத்தும் மக்களாட்சியின் மாண்பு மங்கிவருவதையே தேசத்துரோக வழக்கு வெளிப்படுத்துகிறது. இது கடுமையான கண்டனத்திற்குரியது. இதுபோன்ற பொய் வழக்குகளின் மூலம் மாற்றுக் கருத்து உடையவர்களைச் சிறுமைப்படுத்தும் ஒடுக்குமுறைக்கு எதிராக குரல் அனைவரும் குரல் கொடுக்க வேண்டும்’ என்று கோரிக்கை விதித்துள்ளது.