மணல் திருட்டு விவகாரம்: லஞ்சம் வாங்குனா வீடியோ எடுப்பீங்களோ: வைரலாகும் வீடியோ!

 

மணல் திருட்டு விவகாரம்: லஞ்சம் வாங்குனா வீடியோ எடுப்பீங்களோ: வைரலாகும் வீடியோ!

மணல் கடத்தல் விவகாரத்தில் சாயல்குடி ஆய்வாளர் குறித்த சர்ச்சை வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம்: மணல் கடத்தல் விவகாரத்தில் சாயல்குடி ஆய்வாளர் குறித்த சர்ச்சை வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் காவல் ஆய்வாளர் முகமது நசீர், திருட்டுத்தனமாக மணல் அள்ளுவதற்கு அனுமதி அளித்தது, அதற்கு லஞ்சம் கேட்டது தொடர்பாக அதில் சம்பந்தப்பட்ட காளி என்பவர் ஆடியோ ஒன்றை வெளியிட்டார்.  இதனை காரணமாக ஆய்வாளர் முகமது நசீர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இந்நிலையில் காளியின் உறவினர் ஒருவரின்டிராக்டரை , சாயல்குடி ஆய்வாளர் ஜேக்கர் ஜெர்ரி பறிமுதல் செய்துள்ளார். அப்போது ஆய்வாளர் ஜெர்ரிக்கும், காளியின் உறவினர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது பேசிய ஆய்வாளர் ஜேக்கர் ஜெர்ரி, மணல் திருடுவீங்க, லஞ்சம் வாங்குனா வீடியோ எடுப்பீங்க என்று ஆவேசமாக பேசியுள்ளார். தற்போது இந்த  வீடியோ  தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.