மணல் கொள்ளை; ஆந்திர அரசுக்கு ரூ.100 கோடி அபராதம்!

 

மணல் கொள்ளை; ஆந்திர அரசுக்கு ரூ.100 கோடி அபராதம்!

தண்ணீர் மனிதர் என அழைக்கப்படும் ராஜேந்திர சிங் மற்றும் அனுமோலு காந்தி ஆகியோர் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் இது தொடர்பாக வழக்கு தொடர்ந்தனர்

அமராவதி: மணல் கொள்ளை தொடர்பாக ஆந்திர மாநில அரசுக்கு ரூ.100 கோடி அபராதம் விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஆந்திராவில் சந்திரபாபு தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த அரசின் பதவிக்காலம் முடிவடைவதையொட்டி, எதிர்வரவுள்ள மக்களவை தேர்தலுடன் சேர்த்து அம்மாநில சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது.

sand mafia

இந்த நிலையில், விஜயவாடாவில் உள்ள ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வீட்டின் அருகே மணல் கொள்ளை நடப்பதாகவும், இதனால், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதாகவும் புகார்கள் எழுந்தன. இதையடுத்து,  தண்ணீர் மனிதர் என அழைக்கப்படும் ராஜேந்திர சிங் மற்றும் அனுமோலு காந்தி ஆகியோர் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் இது தொடர்பாக வழக்கு தொடர்ந்தனர்.

national green tribunal

தொடர்ந்து, கிருண்ஷா நதியில் சோதனை செய்த தேசிய பசுமை தீர்ப்பாய அதிகாரிகள் மணல் கொள்ளை நடந்ததை உறுதி செய்தனர். இதையடுத்து, ஆந்திர மாநில அரசுக்கு ரூ.100 கோடி அபராதம் விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அபராத தொகையை மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் கணக்கில் சேர்த்து மாசு கட்டுப்பாட்டுக்காக மட்டுமே செலவிட வேண்டும் என தலைமை செயலாளருக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், கிருஷ்ணா நதியில் மணல் அள்ளுவதை முழுமையாக தடை செய்ய வேண்டும் என்றும் தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

இதையும் வாசிங்க

தமிழ்படம் சிவா பாணியில் ஓ.பி.எஸ்.-சை கலாய்த்த மு.க.ஸ்டாலின்