மணல் கடத்தல் விவகாரம் : வி.ஏ.ஓவை போனில் மிரட்டிய பெண் வருவாய் ஆய்வாளர் சஸ்பெண்ட் !

 

மணல் கடத்தல் விவகாரம் : வி.ஏ.ஓவை போனில் மிரட்டிய பெண் வருவாய் ஆய்வாளர் சஸ்பெண்ட் !

கடந்த சில நாட்களுக்கு முன்னர், திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் அருகே உள்ள காட்டூர் பகுதி வி.ஏ.ஓ கார்த்திக் உரிய ஆவணங்கள் இல்லாமல் மணல் கொண்டு சென்ற லாரியை மடக்கிப் பிடித்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர், திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் அருகே உள்ள காட்டூர் பகுதி வி.ஏ.ஓ கார்த்திக் உரிய ஆவணங்கள் இல்லாமல் மணல் கொண்டு சென்ற லாரியை மடக்கிப் பிடித்தார். இதனை அறிந்த பொங்கலுார் வருவாய் ஆய்வாளர் ஈஸ்வரி, வி.ஏ.ஓ கார்த்திக் கார்த்திக்-ஐ தொலைப்பேசியில் அழைத்து அந்த லாரியை விடுவிக்குமாறு கூறினார். அப்போது, அந்த லாரி உரிமையாளர்கள் தாசில்தார், கலெக்டர் எல்லாரையும் கவனித்து (லஞ்சம்) வருகின்றனர்.அதனால் அந்த லாரியை விடுவியுங்கள் என்று கார்த்திக்கை மிரட்டினார். ஈஸ்வரியின் இந்த உரையாடல் வாட்ஸ் ஆப்பில் பகிரப்பட்டு சர்ச்சையை ஏற்படுத்தியது. 

ttn

இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்துமாறு டி.ஆர்.ஓ. சுகுமாரை கலெக்டர் விஜய கார்த்திகேயன் உத்தரவிட்டார். அதன் படி, விசாரணை மேற்கொண்ட சுகுமார் மணல் கடத்தலுக்கு, ஈஸ்வரி லஞ்சம் வாங்கிக் கொண்டு அவர்களுக்கு உதவியதாக கலெக்டரிடம் தெரிவித்துள்ளார். 

ttn

இதனையடுத்து இது குறித்து விளக்கம் அளித்து கலெக்டர் விஜய கார்த்திகேயன் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், டி.ஆர்.ஓ கொடுத்த தகவலின் பேரில், குற்றம் சாட்டப்பட்ட வருவாய் ஆய்வாளர் ஈஸ்வரி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்றும் வி.ஏ.ஓ கார்த்திக் கொடுத்த தகவலின் படி வாகனங்களின் அனுமதிச் சீட்டுகளை முறையாகச் சோதிக்காதது ஏன் என்பது குறித்து விளக்கம் அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்த விவாகரத்தில் வி.ஏ.ஓ கார்த்திக்கின் நடவடிக்கை குறித்து டி.ஆர்.ஓ சுகுமார் விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் அதன் பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.