மணல் அள்ள விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து ஆந்திராவில் தெலுங்கு தேசம் போராட்டம்!

 

மணல் அள்ள விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து ஆந்திராவில் தெலுங்கு தேசம் போராட்டம்!

இரண்டரை மாதங்களாக வேலை இல்லாமல் தடுமாறும் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சம் 10,000 நிவாரணம் வழங்கக்கோரியும் தெலுங்கு தேசம் இன்று மாநிலம் தழுவிய போராட்டம் நடத்த அழைப்பு விடுத்திருந்தது. இப்புடி எல்லாவற்றுக்கும் போராட்டம் நடத்த கிளம்பினால், நாடு சுடுகாடாகிவிடும் என சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி அரசுக்கு ஏதும் ஒத்தூதியதாக தகவல் இல்லை.

ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உலகெல்லாம் பறந்துசென்று தொழிலதிபர்களைச் சந்தித்து முதலீடுகளை ஈர்ப்பதிலும், வேலைவாய்ப்பை பெருக்குவதிலும் கவனம் செலுத்துவது ஒருபக்கம் இருக்க, லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு பறிபோய்விட்டதாக தெலுங்கு தேசம் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தியிருக்கிறது. தலைநகர் அமராவதி ஒருபக்கம் அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருக்க, மாநில மணல் கொள்கை குறித்து புதிய அரசு இன்னமும் ஒரு இறுதிமுடிவுக்கு வராததால், மணல் விற்பனை படுத்துவிட்டது. மணல் கிடைக்காததால் கட்டிட தொழிலாளர்களுக்கு வேலை இல்லாமல் போய்விட்டது. டிராக்டர் லோடு மணல் ரூ.600க்கு விற்கப்பட்ட மணல் இப்போது பத்து மடங்கிற்கும் கூடுதலாக 6800க்கு விற்பனையாகிறது.

TDP demands compensation

எனவே, மணல் குவாரிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை உடனடியாக விலக்கக்கோரியும், இரண்டரை மாதங்களாக வேலை இல்லாமல் தடுமாறும் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சம் 10,000 நிவாரணம் வழங்கக்கோரியும் தெலுங்கு தேசம் இன்று மாநிலம் தழுவிய போராட்டம் நடத்த அழைப்பு விடுத்திருந்தது. இப்புடி எல்லாவற்றுக்கும் போராட்டம் நடத்த கிளம்பினால், நாடு சுடுகாடாகிவிடும் என சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி அரசுக்கு ஏதும் ஒத்தூதியதாக தகவல் இல்லை. ஆனாலும், போராட்டத்தை ஒடுக்கும்வகையில் தெலுங்குதேச முக்கிய தலைவர்களை வீட்டுக்காவலில் வைத்துவிட்டார்கள்.