மணமேடையில் பப்ஜி விளையாடும் மாப்பிளை: பரிதாபமாக பார்க்கும் மணமகள்; வைரல் வீடியோ!

 

மணமேடையில் பப்ஜி விளையாடும் மாப்பிளை: பரிதாபமாக பார்க்கும் மணமகள்; வைரல் வீடியோ!

மணமகன் ஒருவர் மேடையிலேயே  பப்ஜி விளையாடும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. 

மணமகன் ஒருவர் மேடையிலேயே  பப்ஜி விளையாடும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. 

தென் கொரியாவை சேர்ந்த வீடியோ கேம் நிறுவனம் புளுஹோல். இந்த நிறுவனம் தற்போது பிளேயர் அன்நோன் பாட்டில் கிரவுண்ட்ஸ் என்னும் வீடியோ விளையாட்டை அறிமுகப்படுத்தியது.  சுருக்கமாக ‘பப்ஜி’ என அழைக்கப்படும் இந்த விளையாட்டு இளைஞர்கள், சிறுவர்களிடையே மிகவும் பிரபலமாகி உள்ளது.

pubg

இந்த விளையாட்டு வன்முறையைத் தூண்டுவது போல் அமைந்துள்ளதாகப் பல ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.  ஒரு சில கல்லூரி விடுதிகளில் தங்கி உள்ள மாணவர்கள் இந்த விளையாட்டை விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆயினும் இந்த விளையாட்டைச் சிறுவர்களும், இளைஞர்களும் விளையாடுவதை நிறுத்தவில்லை. அதே சமயம் இந்த விளையாட்டு மனதளவில் மாணவர்களுக்குப் பாதிப்பு ஏற்படுவதும் அதனால் அவர்கள் குற்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

pubg

இந்நிலையில் மணமகன் ஒருவன் திருமணத்தின் போது மணமேடையில் அமர்ந்து பப்ஜி விளையாடுகிறார். அப்போது அவரது அருகில் இருக்கும் மணமகள் அமைதியாகஅமர்ந்து செல்போனையே பரிதாபமாக பார்க்கிறார். அப்போது ஒருவர் திருமண பரிசு ஒன்றை அளிக்க மணமகன் அதை தட்டி விட்டு விட்டு மீண்டும் பப்ஜியில்தீவிரம் காட்டுகிறார். இந்த வீடியோவானது  தற்போது டிக் டோக் ஆப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. 

 

தற்போது இந்த வீடியோவானது  சமூகவலைதளங்களில்  வைரலாகி வருகிறது. இருப்பினும் இது உண்மையாக எடுக்கப்பட்டதா அல்லது டிக் டோக் ஆப்பிற்காக என்பது உறுதியாகவில்லை. முன்னதாக தொடர்ந்து 45 நாட்கள்  பப்ஜி விளையாடியதால் தெலுங்கானா இளைஞர் ஒருவர் கழுத்து நரம்பு பாதிக்கப்பட்டு உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.