மணக்குள விநாயகர் கோயில் மர தங்கத்தேர் உற்சவ விழா நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது.

 

மணக்குள விநாயகர் கோயில் மர தங்கத்தேர் உற்சவ விழா நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது.

மணக்குள விநாயகர் கோயிலில் மர தங்கத்தேர் உற்சவ விழா நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு உற்சவ விநாயகரை தரிசனம் செய்தனர்.

புதுச்சேரி: 

விநாயகர் ஸ்தலங்களில் வேறு எங்குமே இல்லாத சிறப்பாக பள்ளியறை இந்த கோயிலில் அமைந்துள்ளது. இந்த கோயில் பள்ளியறையில் விநாயகரோடு உடன் இருப்பது அவரது தாயார் சக்தி தேவியார் ஆவார். தினமும் நைவேத்தியம் முடிந்தவுடன் விநாயகர் பள்ளியறைக்கு செல்வார். 

pondy

இதன் அடையாளமாக தினமும் பாதம் மட்டுமே இருக்கும் உற்சவ விக்ரகம் கொண்டு செல்லப்படுகிறது. தற்போது மூலவரான மணக்குளத்து விநாயகர் இருக்கும் பீடம் இருப்பதே நீர் நிலை அமைந்துள்ள ஒரு கிணறுதான். இதன் மீதுதான் இத்தல இறைவன் வீற்று இருக்கிறார். 

இந்த தகவல் இத்தலத்தை நன்கு அறிந்த பலருக்கும் தெரியாத ஒரு செய்தியாகும். மிகவும் பிரசித்தி பெற்ற தொல்லைக்காசு சித்தர் இந்த மணக்குளத்து விநாயகரை வணங்கியுள்ளார்.

மேலும் பாரதியார், அரவிந்தர் அன்னை ஆகியோர் இத்தலத்தின் தீவிர பக்தர்களாக இருந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

pondy manakula vinaygar

இத்தகைய பெருமைகள் வாய்ந்த மணக்குள விநாயகர் கோயிலில் ஆண்டிற்கு ஒரு முறை நுாற்றாண்டு பழமை வாய்ந்த மர தங்கத்தேர் உற்சவம் நடைபெறுவது வழக்கம் .

அதன்படி இந்தாண்டிற்கான மரதங்கத்தேர் உற்சவம் நேற்று நடைபெற்றது அதனையடுத்து மாலை 6 மணிக்கு விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.

அதைதொடர்ந்து மணக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமியுடன், விநாயகர் சன்னதி புறப்பாடும், இரவு 8 மணிக்கு மணக்குள விநாயகர் மர தங்கத்தேரில் உற்சவமும் நடைபெற்றது.

pondy manakula vinayagar

புதுச்சேரியின் முக்கிய வீதிகள் வழியாக தேர் ஊர்வலம் சென்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரிகள் செய்திருந்தார்கள்.