மட்டன் தண்ணிக்குழம்பு! சேலம் சிறப்பு…

 

மட்டன் தண்ணிக்குழம்பு! சேலம் சிறப்பு…

கடாயில் இருக்கும் கறியை நன்றாக கிளறிக்கிளறி விட்டு டிரை ஆக்குங்கள்.இப்போது மட்டன் தண்ணிக்குழம்பும் ,இலவச இணைப்பாக மட்டன் பெப்பர் ஃபிரையும் தயார்.

இந்த மட்டன் தண்ணிக்குழம்பு  ரெசிப்பி ஊறுக்கு ஊர் மாறுபடும்  இங்கே நீங்கள் பார்க்கப்போவது சேலம் ஸ்டைல்.

தேவையான பொருட்கள்

மட்டன் ( கொழுப்பும் , ஈரலும் கொஞ்சம் சேர்த்து) ஒரு கிலோ

சின்ன வெங்காயம் ¼ கிலோ,உரித்துத் தட்டிவைக்கவும்

ஒரு தக்காளி

இஞ்சிப்பூண்டு பேஸ்ட்

மல்லித்தூள்  5 டீஸ்பூன்

மிளகாய் தூள் 3 டீஸ்பூன்

மஞ்சள் தூள்

மிளகுத்தூள் 2 ஸ்பூன்

பட்டை,

கிராம்பு

அரை ஸ்பூன் மிளகு

தேங்காய் துருவல் 1 மூடி

அரை ஸ்பூன் சோம்பு

எண்ணெய்

பச்சை மிளகாய் 2

காய்ந்த மிளகாய் 2

ஆக்சுவலா,இது சண்டேனா ரெண்டுங்கற மாதிரி டூ இன் ஒன் ரெசிப்பி!

mutton

எப்படிச் செய்வது

ஒரு குக்கரை அடுப்பில் வையுங்கள்.அதில் எண்ணெய் விட்டு,தட்டிய சின்ன வெங்காயத்தை போட்டு லேசாக உப்பு தூவி வதக்குங்கள்.அடுத்தது அரை டீஸ்பூன் இஞ்சிபூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்குங்கள்.பச்சை வாசனை போனதும்,மட்டனைச் சேர்த்து மீண்டும் கொஞ்சம் உப்புச்சேர்த்து வதக்குங்கள்.

மட்டன் நிறம் மாறி வெளுக்கத் துவங்கும்போது,மஞ்சள் தூள்,மிளகாய்தூள், மல்லித்தூள் ஆகியவற்றை கொடுத்திருக்கும் அளவுகளில் சேர்த்து நன்றாக கிளறி விட்டு,கறி முழுகத் தேவையானதை விட அதிக தண்ணீர் சேர்த்து,குக்கரை மூடி ஆறு விசில் விட்டதும் அடுப்பை அனைத்து விடுங்கள்.

தேங்காய்,பட்டை,கிராம்பு,மிளகு,சோம்பு ஆகியவற்றை மிக்சியில் அளவாகத் தண்ணீத் விட்டு மையாக அரைத்துக் கொள்ளுங்கள்.இப்போது,பக்கத்து அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் சிறிதளவு எண்ணெய் விட்டு ,இரண்டு பச்சை மிளகாய், இரண்டு காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கிவிட்டு,குக்கரை திறந்து, அதில் உள்ள கறித்துண்டுகளை எடுத்து இந்தக் கடாயில் போடுங்கள்.பேருக்கு ஒன்றிரண்டு துண்டுகளை விட்டுவிட்டு மொத்தத்தையும் எடுத்துப்போடுங்கள்.

mutton pepper fry

இரண்டே இரண்டு கரண்டி  குழம்பை மட்டும் எடுத்து இந்தக் கடாயில் ஊற்றி கிளறி விடுங்கள்.இரண்டு ஸ்பூன் மிளகுத்தூள் சேர்த்து மீண்டும் சிறிதளவு உப்புப்போடுங்கள்.அடுப்பை சிம்மில் வையுங்கள்.இப்போது வாருங்கள் குக்கரிடம் போவோம்.

மறுபடியும் அடுப்பை பற்றவைத்து குக்கரில் இருக்கும் குழம்பு கொதிக்க தொடங்கும்போது அரைத்து வைத்த தேங்காய் விழுதைப்போட்டு பச்சை.வாசம் போகும் வரை கொதிக்க விடுங்கள். தேவைப்பட்டால் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து உப்பை சரிபார்த்து அடுப்பை அனையுங்கள். கடாயில் இருக்கும் கறியை நன்றாக கிளறிக்கிளறி விட்டு டிரை ஆக்குங்கள்.இப்போது மட்டன் தண்ணிக்குழம்பும் ,இலவச இணைப்பாக மட்டன் பெப்பர் ஃபிரையும் தயார்.