‘மட்டன் சூப் கொலைகள்’: மாமியாரை கொல்வதற்கு முன்பு நாயை கொன்ற ஜோலி !

 

‘மட்டன் சூப் கொலைகள்’: மாமியாரை கொல்வதற்கு முன்பு நாயை கொன்ற ஜோலி !

மாமியார் அன்னம்மாவுக்கு 2002ஆம் ஆண்டு மட்டன் சூப்பில் சயனைடை கலந்து கொடுத்துள்ளார்.

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள கூடத்தாய் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ஜோலி  தாமஸ் என்பவர் கணவரின் சகோதரன் மீது இருந்த காதல் மோகத்தால் மொத்த குடும்பத்தையும் கொலை செய்து அதிர்ச்சியைக் கிளம்பியுள்ளார். அதன்படி  நகைப்பட்டறையில் பணிபுரியும் தனது நண்பரிடமிருந்து  சயனைடு வாங்கியுள்ளார். ஜோலி  குடும்பத்தில் உள்ளவர்கள் இரவு உணவுக்குப்பின் சூப் சாப்பிடுவது வழக்கம். அதைப் பயன்படுத்தி முதலில் மாமியார் அன்னம்மாவுக்கு 2002ஆம் ஆண்டு மட்டன் சூப்பில் சயனைடை கலந்து கொடுத்துள்ளார்.  இதன் முறையே  2008ஆம் ஆண்டு மாமனார் டாம் தாமஸையும் 2011ஆம் ஆண்டு கணவர் ராய் தாமஸையும் கொலை செய்துள்ளார். ஜோலியின் நடவடிக்கையில் சந்தேகம் பட்ட அன்னம்மாவின் சகோதரர் மேத்யூவையும் இதே பாணியில் தீர்த்து கட்டியுள்ளார் . இதன்பின்னர் இறுதியாக 2016ஆம் ஆண்டு காதலன் சாஜுவின் மனைவி மற்றும் 10 மாத பெண் குழந்தைக்கும் மட்டன் சூப் கொடுத்து கொலை செய்துள்ளார்.

joly

இதையடுத்து வெளிநாட்டிலிருந்த ஜோலியின் முதல் கணவரின் சகோதரர் தனது குடும்பத்தில் ஏற்பட்ட மரணங்கள்  மீது சந்தேகம் இருப்பதாகப் போலீசில் புகார் கொடுக்க,  ஜோலி மற்றும் இரண்டாவது கணவர் சாஜு இருவரையும் கடந்த அக்டோபர் மாதம் காவல்துறையினர் கைது செய்தனர். 

joly

இந்நிலையில்  இந்த  தொடர் கொலை சம்பவங்கள் தொடர்பாக மேலும்  ஒரு முக்கிய தகவல் போலீசாருக்கு கிடைத்துள்ளது. ஜோலி தான் வளர்த்து வந்த நாயை  பல ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது. இதை  ஒப்புக்கொண்ட ஜோலி, நாய்க்கு வெறிபிடித்து விட்டது. அதனால் விஷம் வைத்து கொன்றேன் என்று கூறியுள்ளார். ஆனால்  இதை போலீசார் நம்ப மறுத்துள்ளனர். ஜோலி தொடர் கொலைகளை செய்வதற்கு முன்பு, நாய்க்கு சயனைடு சூப் கொடுத்து கொலை செய்து பரிசோதனை செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இந்நிலையில், நாய் புதைக்கப்பட்ட இடத்தைத் தோண்டி உடலை பரிசோதனை செய்ய சிறப்பு புலனாய்வு துறை முடிவெடுத்துள்ளது. ஒருவேளை சயனைடால் நாய் இறந்தது உறுதியானால், இந்த வழக்கின் அது முக்கிய ஆதாரமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.