மட்டன் காட்டுக்கறி..! ராம்நாட் ஸ்பெஷல் : வீட்டிலேயே செய்யலாம்..!

மட்டன் காட்டுக்கறி..! ராம்நாட் ஸ்பெஷல் : வீட்டிலேயே செய்யலாம்..!

பொதுவாகவே ராமநாதபுரம் மாவட்ட சமையல் வகைகள் எளிமையானவை. கைபிடி அளவு பிஞ்சு புளியங்காய்,ரெண்டு மிளகாய்,ரெண்டு கல் உப்பு சேர்த்து அரைச்சா வெஞ்சனம். அப்படி ஒரு எளிமையான மட்டன் கறிதான் இந்தக் காட்டுக்கறி! குலசாமி கோவில் கிடாவெட்டுகளின் போது,பெரிய பாத்திரங்களில்  செய்து பனை ஓலைகளில் வைத்து தருவார்கள்.
வாருங்கள் செய்து பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

ஆட்டுக்கறி ½ கிலோ
காய்ந்த மிளகாய் 50 கிராம் 

mutton

மிளகாயை இரண்டாக கிள்ளி,விதைகளை உதிர்த்து விடவும்.
பூண்டு 50 கிராம்

garlic

எண்ணெய் 50 மில்லி
உப்பு
கறிவேப்பிலை

curry

அவளவுதான்!

எப்படிச் செய்வது.

குக்கரை எடுத்து அடுப்பில் வைக்கவும்.அது சூடானதும் விதைகள் அகற்றப்பட்ட காய்ந்த மிளகாய்களையும் கறிவேப்பிலை இலைகளையும் போட்டு வதக்கி, அதன் பிறகு பூண்டுப் பற்களைப் போடுங்கள். அடுப்பை சிம்மில் வைத்து வதக்குங்கள்

fry

.பூண்டுப் பற்கள் நிறம் மாறத் தொடங்கும்போது மட்டன் துண்டுகளையும் போட்டுத் தேவையான அளவு உப்புச் சேர்த்து கிளறிவிட்டு 5 நிமிம் வேகவிடவும்.மட்டனில் இருந்து நீர்விட்டு வந்ததும் ஒரு கப் தண்ணீர் சேர்த்து குக்கர் மூடியைப் போட்டு அடுப்பை பெரிதாக வைத்து வெயிட் போடுங்கள்.

mutton

குக்கர் ஒரு விசில் விட்டதும் அடுப்பை சிம்மில் வைத்து 7 நிமிடம் வேகவிட்டு அடுப்பை அணையுங்கள்.ஆவி அடங்கியதும்,குக்கரை திறந்து உப்பை சரிபார்த்து, தண்ணீர் அதிகமிருந்தால் மீண்டும் அடுப்பை பற்றவைத்து அந்த நீர் சுண்டும் வரை புரட்டிவிட்டு இறக்கி பரிமாறிப் பாருங்கள்,

mutton

காட்டுக்கறி டேஸ்ட் அப்படியிருக்கும்.!