மடிக்கக்கூடிய புதிய ஸ்மார்ட்போன்…சாம்சங் நிறுவனம் அதிரடி அறிவிப்பு – முழு விவரம் உள்ளே!

 

மடிக்கக்கூடிய புதிய ஸ்மார்ட்போன்…சாம்சங் நிறுவனம் அதிரடி அறிவிப்பு – முழு விவரம் உள்ளே!

சாம்சங் நிறுவனம் மடிக்க கூடிய புதிய ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.

டெல்லி: சாம்சங் நிறுவனம் மடிக்க கூடிய புதிய ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.

தற்போதைய ஸ்மார்ட்போன் மார்க்கெட்டில் இன்-டிஸ்பிளே விரல்ரேகை சென்சார், கேமரா மறைக்காத வகையில் முழு டிஸ்பிளே வடிவமைப்பு என்று புதிது புதிதான தொழில்நுட்பங்கள் அறிமுகம் ஆகிக் கொண்டே இருக்கின்றன. அந்த வகையில், மடிக்க கூடிய ஸ்மார்ட்போனை சாம்சங் நிறுவனம் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யும் என்று அதிகம் எதிர்பார்க்கப்பட்டு வந்தது. இந்நிலையில், மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே சார்ந்த சிறப்பம்சங்களை சாம்சங் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, மடிக்கப்பட்ட நிலையில் 4 இன்ச் ஸ்மார்ட்போனாகவும், திறந்த நிலையில் 7 இன்ச் டேப்லெட் போன்றும் அந்த ஸ்மார்ட்போன் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போனில் இரண்டு OLED பேனல்கள் வழங்கப்படுகிறது. முதன்மை டிஸ்பிளேவில் 7.29 இன்ச்களும், இரண்டாவது டிஸ்பிளே 4.58 இன்ச் கொண்டிருக்கும். பேனல் அளவு 7.3 இன்ச் மற்றும் 4.6 இன்ச் ஆக உள்ளது. மடிக்கக் கூடிய ஸ்மார்ட்போன்  உற்பத்தி நவம்பர் மாதத்தில் தொடங்கும் என்று தெரிகிறது.

மேலும், முதல்கட்டமாக வருடத்திற்கு ஐந்திலிருந்து பத்து லட்சம் யூனிட்களை உற்பத்தி செய்ய சாம்சங் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, இந்த சாதனத்திற்கு சந்தையில் கிடைக்கும் வரவேற்பை பொறுத்து உற்பத்தியை அதிகரிக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.