மஞ்சளாறு அணையிலிருந்து பாசனத்திற்கு திறந்து விடப்பட்ட நீர் : கொண்டாட்டத்தில் விவசாயிகள்..!

 

மஞ்சளாறு அணையிலிருந்து பாசனத்திற்கு திறந்து விடப்பட்ட நீர் : கொண்டாட்டத்தில் விவசாயிகள்..!

தேனி மாவட்டத்தில் உள்ள மஞ்சளாறு அணை கடந்த 28 ஆம் தேதி முழு கொள்ளளவை எட்டியது. 

தமிழகத்தில் துவங்கிய கன மழையால் அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. அதே போல, கொடைக்கானல் மலைப் பகுதியில் பெய்து வரும் கன மழையால், தேனி மாவட்டத்தில் உள்ள மஞ்சளாறு அணை கடந்த 28 ஆம் தேதி முழு கொள்ளளவை எட்டியது. 

Manjalar dam

மஞ்சளாறு அணை முழு கொள்ளலைவை எட்டியதால் பாசனத்திற்காகத் தண்ணீர் திறந்து  விடுமாறு தேனி, திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அதனை ஏற்ற தமிழக அரசு, முதல் போகச் சாகுபடிக்காக 135 நாட்களுக்குத் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். முதலமைச்சர் உத்தரவின் படி, இன்று காலை தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் பாசனத்திற்காக நீரைத் திறந்து வைத்தார்.

Manjalar dam

இந்த நீர் திறப்பின் மூலம் தேனி மாவட்டத்திலுள்ள தேவதானப்பட்டி, கெங்குவார்ப்பட்டி, ஜி.கல்லுப்பட்டி கிராமங்களும், திண்டுக்கல் மாவட்டம் கணவாய்ப்பட்டி, வத்தலக்குண்டு, குன்னுவராயன்கோட்டை ஆகிய கிராமங்களில் உள்ள 5,259 ஏக்கர் விலை நிலங்களுக்குத் தண்ணீர் இன்று இன்று முழுவதும் நீர் பாசனம் செய்யப்பட்டுள்ளது. இதனால், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியில்  கொண்டாடி வருகின்றனர்.