மசூதியில் தங்கியிருந்த வெளிநாட்டுப் பெண்கள் உள்ளிட்ட 8 பேர் கைது! 

 

மசூதியில் தங்கியிருந்த வெளிநாட்டுப் பெண்கள் உள்ளிட்ட 8 பேர் கைது! 

கொரோனா பரவுதலைத் தடுக்க நாடு முழுவதும் திடீரென்று ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதனால், வெளிநாட்டிலிருந்து, வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்ப முடியாத நிலையில் தமிழகத்தில் சிக்கிக்கொண்டனர்.

சென்னையில் மசூதி ஒன்றில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த பெண் உள்ளிட்ட 8 பேரை போலீசார் கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா பரவுதலைத் தடுக்க நாடு முழுவதும் திடீரென்று ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதனால், வெளிநாட்டிலிருந்து, வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்ப முடியாத நிலையில் தமிழகத்தில் சிக்கிக்கொண்டனர். இதே போல் தமிழகத்தைச் சேர்ந்தவர்களும் வெளி மாநிலங்களில், வெளிநாடுகளில் சிக்கிக்கொண்டனர்.
இந்த நிலையில், சென்னை முத்தியால் பேட்டை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட அப்பு மேஸ்திரி தெருவில் உள்ள ஒரு மசூதியில் பெண்கள் உள்ளிட்ட வெளிநாட்டினர் சிலர் தங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் போலீசார் அந்த மசூதியில் திடீரென்று ஆய்வு நடத்தினர்.

arretsed-67

அப்போது அரசு பிறப்பித்த எச்சரிக்கையை மீறி, தங்களை உடல் பரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்ளாமல் மசூதியில் மூன்று பெண்கள் மற்றும் ஐந்து மதகுருக்கள் என எட்டு பேர் தங்கியிருப்பது தெரியவந்தது. அவர்களை உதவி கமிஷனர் கோடிலிங்கம் தலைமையிலான போலீஸ் குழு கைது செய்தது. அவர்களை உடனடியாக ஓமந்தூரார் தோட்டத்தில் உள்ள அரசு ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதித்து பரிசோதனை செய்யப்பட்டனர். பின்னர் புழல் சிறையில் தனிமை காவலில் வைக்கப்பட்டுள்ளனர். 
மசூதியில் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் தங்கியிருந்ததால் அப்ப மேஸ்திரி தெரு முழுவதும் கொரோனா தொற்று வாய்ப்புள்ள பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியிலிருந்து மக்கள் யாரும் வெளியே செல்ல முடியாத படி தடைகள் ஏற்படுத்தி சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும் போலீசார் அந்த பகுதியில் யாரும் வெளியேறிவிடாமல் இருக்க பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.