மங்குனி அமைச்சரையும் மணல்கொள்ளை எம்.எல்.ஏவையும் கைது செய்யவேண்டும்! செய்வீர்களா முதலமைச்சரே?

 

மங்குனி அமைச்சரையும் மணல்கொள்ளை எம்.எல்.ஏவையும் கைது செய்யவேண்டும்! செய்வீர்களா முதலமைச்சரே?

குமுதம் ரிப்போர்ட்டர் இதழின் விருதுநகர் மாவட்ட செய்தியாளர் கார்த்தி.  இவரை மர்ம நபர்கள் சில பேர் சுற்றிவளைத்து  சிவகாசி பெல் ஹோட்டல் முன்பாக  ‘ஏன்டா நியூஸா போடுற?’என்று கேட்டவாறு இரும்பு கம்பியால் தாக்கினர்.

குமுதம் ரிப்போர்ட்டர் இதழின் விருதுநகர் மாவட்ட செய்தியாளர் கார்த்தி.  இவரை மர்ம நபர்கள் சில பேர் சுற்றிவளைத்து  சிவகாசி பெல் ஹோட்டல் முன்பாக  ‘ஏன்டா நியூஸா போடுற?’என்று கேட்டவாறு இரும்பு கம்பியால் தாக்கினர். பின்னர் அரிவாளால் வெட்டியுள்ளனர்.  இதனால் ரத்தம் சொட்ட சொட்ட அங்கிருந்த தப்பிஓடிய  கார்த்தி தற்போது தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். குமுதம் ரிப்போர்ட்டர் இதழின் விருதுநகர் மாவட்ட செய்தியாளர் கார்த்தி.  இவரை மர்ம நபர்கள் சில பேர் சுற்றிவளைத்து  சிவகாசி பெல் ஹோட்டல் முன்பாக  ‘ஏன்டா நியூஸா போடுற?’என்று கேட்டவாறு இரும்பு கம்பியால் தாக்கினர். பின்னர் அரிவாளால் வெட்டியுள்ளனர்.  இதனால் ரத்தம் சொட்ட சொட்ட அங்கிருந்த தப்பிஓடிய  கார்த்தி தற்போது தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அதாவது அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கும் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜ வர்மனுக்கும் இடையே உட்கட்சி பிரச்சனை நிலவுவதாகச் செய்தி வெளியான நிலையில் செய்தியாளர் தாக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. நேற்று வெளியான குமுதம் ரிப்போர்ட்டர் இதழில்‘ராஜேந்திர பாலாஜியை வீழ்த்துவாரா ராஜவர்மன்?‘என்னும் தலைப்பில் கார்த்தி எழுதிய கட்டுரை பிரசுரமாகி இருந்தது. இதுவே கார்த்தி மீதான தாக்குதலுக்கு காரணம் என சொல்லப்படுகிறது. 

 

 

இந்நிலையில் விருதுநகர் தொகுதி காங்கிரஸ் எம்.பி-யான மாணிக்கம் தாகூர் தனது ட்விட்டர் பக்கத்தில், “சிவகாசியில் பத்திரிகையாளர் மீது மர்ம நபர்கள் கொலைவெறி தாக்குதல் குமுதம் ரிப்போர்ட்டர்) விருதுநகர் மாவட்ட செய்தியாளர் கார்த்தி சிவகாசியில் மர்ம நபர்களால் தாக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதி இன்று வெளியான இதழில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கும் சாத்தூர் எம்.எல்.ஏ ராஜ வர்மனுக்கும் இடையே உட்கட்சி பிரச்சனை நிலவுவதாக செய்தி வெளியான நிலையில் செய்தியாளர் தாக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது! காவல்துறை மங்குனி அமைச்சரையும் மணல்கொள்ளை MLA வையும் கைது செய்யவேண்டும் முதலமைச்சரே செய்வீர்களா?” என பதிவிட்டுள்ளார்.