மங்களூர் விமான நிலையத்தில் கிடந்த பையில் வெடிகுண்டு.. அதிர்ந்தி போன அதிகாரிகள் !

 

மங்களூர் விமான நிலையத்தில் கிடந்த பையில் வெடிகுண்டு.. அதிர்ந்தி போன அதிகாரிகள் !

சந்தேகத்திற்குரிய அந்த பையை அதிகாரிகள் சோதனை செய்து பார்த்தனர். அதில் வெடிகுண்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் உடனே வெடிகுண்டு நிபுணர்களுக்கு அழைப்பு விடுத்தனர். 

பெங்களூர் விமான நிலையத்தை அடுத்து அதிக ஆட்கள் வந்து செல்வது மங்களூர் விமான நிலையத்தில் தான். தினந்தோறும் நூற்றுக் கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இன்று காலை மங்களூர் விமான நிலையத்தில் கருப்பு நிற பை ஒன்று கீழே கிடந்துள்ளது. சந்தேகத்திற்குரிய அந்த பையை அதிகாரிகள் சோதனை செய்து பார்த்தனர். அதில் வெடிகுண்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் உடனே வெடிகுண்டு நிபுணர்களுக்கு அழைப்பு விடுத்தனர். 

ttn

அங்கு விரைந்து சென்ற நிபுணர்கள் அந்த பையைச் சோதித்து பார்த்தனர். அதில், பேட்டரி, ஒயர், வெடிகுண்டு இயக்கும் கருவி மற்றும் வெடிகுண்டு இருந்தது. ஆனால், அதில் டைமர் ஏதும் இல்லாததால் எந்த அசம்பாவிதமும் ஏற்படவில்லை. இருப்பினும், விமான நிலையத்திலிருந்த மக்கள் வெளியேற்றப்பட்டனர். அதனைத் தொடர்ந்து, வெடிகுண்டு வைத்த நபர்கள் யார் என்று அதிகாரிகள் சோதனை செய்து பார்த்ததில், ஆட்டோவில் வந்த நபர் ஒருவர் அந்த பையை புக்கிங் கவுண்டருக்கு அருகே வைத்து சென்றது தெரிய வந்தது. 

ttn

இதனையடுத்து, அந்த மர்ம நபர் வந்த ஆட்டோ எண்ணை வைத்து அவர் யார் என்பதைக் கண்டுபிடிக்க மத்திய பாதுகாப்புத் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், வேறு எங்கேயாவது வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதா என்றும் மோப்ப நாய்களைக் கொண்டு சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.