மங்களூரு துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம்! – திரிணாமுள் காங். நிர்வாகி வழங்கினார்

மங்களூரு துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம்! – திரிணாமுள் காங். நிர்வாகி வழங்கினார்

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து மங்களூருவில் கடந்த 19ம் தேதி நடந்த போராட்டத்தில் கலவரம் வெடித்தது. கலவரத்தைக் கட்டுப்படுத்த போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்தனர். ஆனால், இவர்கள் இருவரும் போராட்டத்தில் பங்கேற்காதவர்கள் என்று கூறப்பட்டது.

கர்நாடக மாநிலம் மங்களூரு துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இருவர் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் மம்தா பானர்ஜி சார்பில் அவரது கட்சித் தலைவர்கள் வழங்கினர்.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து மங்களூருவில் கடந்த 19ம் தேதி நடந்த போராட்டத்தில் கலவரம் வெடித்தது. கலவரத்தைக் கட்டுப்படுத்த போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்தனர். ஆனால், இவர்கள் இருவரும் போராட்டத்தில் பங்கேற்காதவர்கள் என்று கூறப்பட்டது.

mangalore riot

வேலை முடிந்து வீட்டுக்குத் திரும்பியவரும், தன் குழந்தைகளை அழைத்து வந்த தந்தையும் கொல்லப்பட்டதாக கூறப்பட்டது. இவர்களுக்கு கர்நாடக அரசு சார்பில் தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்று முதல்வர் எடியூரப்பா அறிவித்தார். ஆனால், அவருக்கு என்ன நெருக்கடி தரப்பட்டதோ, ரூ.10 லட்சம் வழங்குவதை நிறுத்திவைத்தார். உயிரிழந்தவர்கள் உண்மையிலேயே போராட்டத்தில் பங்கேற்கவில்லை, குற்ற பின்னணி ஏதும் இல்லை என்பதை உறுதி செய்த பிறகே 10 லட்ச ரூபாய் வழங்கப்படும் என்றார்.
இந்தநிலையில், கொல்கத்தாவில் நடந்த குடியுரிமை திருத்தச் சட்டம் எதிர்ப்பு கூட்டத்தில் பேசிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கர்நாடகாவில் இறந்த இருவர் குடும்பத்துக்கும் மனிதாபிமான அடிப்படையில் தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்று அறிவித்தார். அதைத் தொடர்ந்து மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் தினேஷ் திரிவேதி இன்று மங்களூரு வந்தார். உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ஆறுதல் கூறிய அவர், மம்தா பானர்ஜி சார்பில் இரு குடும்பத்தினருக்கும் தலா ரூ.5 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார். மம்தா பானர்ஜியின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.