மங்களம் பொங்க! இந்த நேரத்துல பொங்கல் வைங்க…

 

மங்களம் பொங்க! இந்த நேரத்துல பொங்கல் வைங்க…

தமிழர் திருநாள் எனப்படும் பொங்கல் பண்டிகையானது போகிப் பண்டிகை, பொங்கல் திருநாள், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என பல கொண்டாடப்படுகிறது.

தமிழர் திருநாள் எனப்படும் பொங்கல் பண்டிகையானது போகிப் பண்டிகை, பொங்கல் திருநாள், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என பல கொண்டாடப்படுகிறது. 

pongal

தை மாதம் முதல் நாள் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகையன்று புத்தாடை அணிந்து, புதுப்பானையில் பொங்கல் வைத்து விவசாயத்திற்கு உதவும் சூரியனுக்கும், கால்நடைகளுக்கும் நன்றி செலுத்தப்படுகிறது. கிராமப்புறங்களில் பானையில் கரும்பு, மஞ்சள் கட்டி பொங்கல் வைப்பர். அதன்படி 2020ம் ஆண்டு விகாரி வருஷம் தை மாதம் 1 ஆம் தேதி புதன் கிழமை கொண்டாடப்படுகிறது. அன்றைய நாளில் பொங்கல் வைக்க உகந்த நேரம் காலை 9.30 மணிக்கு மேல் 10 மணிக்குள் பொங்கல் வைத்து 11 மணிக்கு  மேல் 12 மணிக்குள் சூரிய பகவானுக்கு படைக்க வேண்டும் என ஜோதிடர்கள் அறிவுறுத்தியுள்ளனர். 
அதிகாலை வைக்க நினைப்போர் காலை 7.30க்குள் வைத்து முடித்துவிட வேண்டும்.

pongal celebrations

பொங்கல் வைக்க எமகண்டம், ராகு காலத்தை தவிர்ப்பது நல்லது என்றும் பெரியவர்கள் அறிவுரை வழங்குகின்றனர். அதன்படி எமகண்டம் – 7.30 மணி முதல் 9.00 மணி வரை, ராகு காலம் – மதியம் 12.00 மணி முதல் 1.30 மணி வரையாகும். 

village pongal celebrations

இதேபோல் தைமாதம் 2 ஆம் தேதி வியாழக்கிழமை மாட்டுப்பொங்கல். அன்று மாடுகளை குளிப்பாட்டி மாலை 6 மணிக்கு மேல் பொங்கல் வைத்து மாடுகளுக்கு படைக்கவேண்டும்.