‘மக்கள் விரும்பாத திட்டத்தை பாஜக நிறைவேற்றாது’ – சொல்கிறார் ஹெச்.ராஜா

 

‘மக்கள் விரும்பாத திட்டத்தை பாஜக நிறைவேற்றாது’ – சொல்கிறார் ஹெச்.ராஜா

மக்களுக்கு விருப்பமில்லாத எந்த திட்டத்தையும் பாஜக நிறைவேற்றாது என அக்கட்சியின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

ஈரோடு: மக்களுக்கு விருப்பமில்லாத எந்த திட்டத்தையும் பாஜக நிறைவேற்றாது என அக்கட்சியின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். 

தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும் விதமாக பார்க்கப்படும் மீத்தேன், ஹைட்ரோகார்பன் போன்ற திட்டங்களுக்கு எதிராக தமிழக அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவிப்பதும், அதற்கு பாஜக தலைவர்கள் பதிலளிப்பதும் கடந்த சில வருடங்களாக வாடிக்கையாக நடந்து வருவதை பார்க்க முடிகிறது.

இருப்பினும் அரசியலைக் கடந்து, இதுபோன்ற பிரச்னைகளில் தமிழக மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக்கப்படுவதால், இந்த திட்டங்களை அமல்படுத்த முயற்சிக்கும் தற்போதைய மத்திய பாஜக அரசு மீது தமிழக மக்கள் வெறுப்பை உமிழ்ந்து வருகின்றனர். 

இந்த நிலையில், ஈரோட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வந்திருந்த பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, “தமிழகத்தை பாதிக்கும் மீத்தேன், ஹைட்ரோகார்பன் போன்ற திட்டங்களை காங்கிரஸ் அரசு கொண்டுவந்தது என்றும் மக்களின் விருப்பம் இன்றி எந்த திட்டமும் தமிழகத்தில் பாஜக அரசு செயல்படுத்தாது என்றும்” செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.