‘மக்கள் வாழ்வை சீரழிக்கும் மதுக்கடைகளை திறக்காதே’.. டாஸ்மாக் திறக்கப்பட்டதை எதிர்த்து தி.மு.க போராட்டம்!

 

‘மக்கள் வாழ்வை சீரழிக்கும் மதுக்கடைகளை திறக்காதே’.. டாஸ்மாக் திறக்கப்பட்டதை எதிர்த்து தி.மு.க போராட்டம்!

கருப்பு உடை அணிந்து, டாஸ்மாக்குகளுக்கு எதிரான பதாகைகளை ஏந்திய படி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

கொரோனா வைரஸால் தமிழகத்துக்கு ஏற்பட்டுள்ள நிதி பற்றாக்குறையை கட்டுப்படுத்த டாஸ்மாக்குகள் இன்று திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன் படி கொரோனா வைரஸ் அதிகமாக பஉ ரவியுள்ள சென்னை காவல்துறை கட்டுப்பாட்டின் கீழ் வரும் டாஸ்மாக்குகள் தவிர மற்ற அனைத்து டாஸ்மாக்குகளும் இன்று திறக்கப்பட்டு விட்டன. மது வாங்குவதற்கு இன்று காலை முதலே குடிமகன்கள் வரிசையில் நிற்க ஆரம்பித்து விட்டனர். ஊரடங்கு அமலில் இருந்த போதே பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் குடும்ப பிரச்னைகளும் அதிகரித்த நிலையில், இன்று டாஸ்மாக்குகளும் திறக்கப்பட்டு விட்டது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

ttn

இதனிடையே டாஸ்மாக் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கருப்பு சின்னம் அணிந்து திமுக மற்றும் அதன் கூட்டணி சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று மு.க ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன் படி, இன்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தின் வாசலில் கருப்பு உடை அணிந்து, டாஸ்மாக்குகளுக்கு எதிரான பதாகைகளை ஏந்திய படி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அவருடன் உதயநிதி ஸ்டாலினும், துர்கா ஸ்டாலினும் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். 

 

அதில், “கொடிய நோயால் மக்கள் கொத்துக் கொத்தாக சாகும் போது, மந்திரி கல்லா கட்ட டாஸ்மாக் தேவையா? சட்ட ஒழுங்கை சீர்குலைக்கும் மதுக்கடைகளை திறக்காதே… அதிமுக அரசை வன்மையாக கண்டிக்கிறோம்” என்றெல்லாம் கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதன் வீடியோ காட்சிகளை மு.க ஸ்டாலின் அவரது  ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.