மக்கள் மீது காட்டுமிராண்டித்தனமாகத் தாக்குதல் தொடுத்திருப்பது அரசப்பயங்கரவாதம்: சீமான் ஆவேசம்!

 

மக்கள் மீது  காட்டுமிராண்டித்தனமாகத் தாக்குதல் தொடுத்திருப்பது அரசப்பயங்கரவாதம்: சீமான் ஆவேசம்!

பேச்சுவார்த்தை நடத்திய போதும்  சென்னையில் பல்வேறு இடங்களில் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து, பழைய வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர்கள் ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். நீண்ட நேரமாக அவர்கள்  போராட்டம் நடத்தியதால் போலீசார் அவர்களை கலைந்து  செல்லுமாறு கூறியதாக தெரிகிறது.  இதனால் போலீசார் , மற்றும் போராட்டக்காரர்களுக்கு மத்தியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு தடியடி நடந்தது. இதில் 120 பேர் கைது செய்யப்பட்டனர்.  இதை கண்டித்து பெண்கள் உள்பட பலரும் போராட்டத்தைத் தொடர்ந்தனர். போராட்டக்காரர்களிடம் சென்னை காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் நடத்திய பேச்சுவார்த்தை நடத்திய போதும்  சென்னையில் பல்வேறு இடங்களில் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ttn

அதேசமயம் அமைதியான முறையில் போராட்டம் நடத்திய மக்கள் மீது தடியடி நடத்தியதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் இதுகுறித்து சீமான் , சென்னை, பழைய வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக அறவழியில் போராடியவர்கள் மீது காவல்துறையினர் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்குதல் தொடுத்திருப்பது அரசப்பயங்கரவாதம் என்று கூறியுள்ளார்.  மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  ‘தாக்குதலில் இருவர் உயிரிழப்பு என்ற செய்தியும் கேட்டு நெஞ்சம் பதைபதைக்கிறது. பெருஞ்சினமும், ஆத்திரமும் பிறப்பெடுக்கிறது.

தங்களது உரிமைக்காக அறவழியில் போராடுவதும், அரசின் சட்டங்கள் குறித்து மாற்றுக் கருத்துத் தெரிவிப்பதும் அடிப்படை சனநாயக உரிமை. அதனையே மறுத்து அரசின் முடிவை மக்கள் மீது திணிப்பதும், எதிர்ப்போரைத் தாக்குவதும், சிறைப்படுத்துவதும் கடும் கண்டனத்திற்குரியது. குடியுரிமைச் சட்டத்திருத்தத்திற்கு எதிராகப் போராடியவர்கள் மீது தாக்குதல் தொடுத்திட்ட காவல்துறையினர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும், போராடுவோர் மீதான அடக்குமுறைகள் கைவிடப்பட்டு, அறவழியில் போராடுவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் எனவும் தமிழக அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.