மக்கள் மன்றத்திற்கு ரஜினிகாந்த் எச்சரிக்கை!! 

 

மக்கள் மன்றத்திற்கு ரஜினிகாந்த் எச்சரிக்கை!! 

சென்னை: ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து நீக்கப்பட்டவர்களுக்கு ரஜினிகாந்த் திடிர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த 1996-ம் ஆண்டிலிருந்தே அரசியலுக்கு வருவதாகச் சொல்லப்பட்டு வந்த ரஜினி 2016ம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் ரசிகர்களைச் சந்தித்து புகைப்படம் எடுத்தார். அப்போது, தான் அரசியலுக்கு வருவது உறுதி என்றும், போர் வரும் போது களம் காணுவோம் என்றும் அறிவித்தார். இதனால் அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். 

தொடர்ந்து, ரஜினி ரசிகர் மன்றம், ‘ரஜினி மக்கள் மன்றம்’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு அதற்கான நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். கட்சிப் பெயரைக்கூட ரஜினி அறிவிக்காத நிலையில், மக்கள் மன்றத்தின் நிர்வாகிகளாக, ரசிகர் மன்ற நிர்வாகிகளே பெரும்பாலும் நியமிக்கப்பட்டு வந்தனர்.ஒழுங்கு நடவடிக்கை குழு மூலம் புகார் தெரிவிக்கப்பட்ட நிலையில் நிர்வாகிகள் மீது அதிரடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு நீக்கப்பட்டனர். 

rajinimakkalmandram

இந்நிலையில் ரஜினிகாந்த் வாட்ஸ்அப் குழுக்களுக்கு இன்று அறிக்கை மூலம் எச்சரிக்கை ஒன்று விடுத்துள்ளார்,அதில் “ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து நீக்கப்பட்டவர்களை வாட்ஸ்அப் குழுக்களில் இருந்தும் உடனடியாக நீக்கப்பட வேண்டும். அப்படி நீக்கப்படும் உறுப்பினர்களை மறு உத்தரவு வரும் வரை குரூப்பில் சேர்க்க கூடாது. 

ரஜினி மக்கள் மன்ற மாவட்ட, ஒன்றிய, நகர வாட்ஸ்அப் குரூப்களில் பிற மாவட்ட நபர்களை சேர்க்க கூடாது. வாட்ஸ்அப் குரூப்களில் அந்தந்த மாவட்ட நிர்வாகிகளை மட்டுமே உறுப்பினராக சேர்க்க வேண்டும்’ இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.