மக்கள் மத்தியில் வெற்றி பெற முடியவில்லை… நேரம் பார்த்து தி.மு.க கவுன்சிலரை இழுத்த ஓ.பி.எஸ்!

 

மக்கள் மத்தியில் வெற்றி பெற முடியவில்லை… நேரம் பார்த்து தி.மு.க கவுன்சிலரை இழுத்த ஓ.பி.எஸ்!

ஊரக உள்ளாட்சித் தேர்தல்களில் அதிக இடங்களில் தி.மு.க கூட்டணி வெற்றி பெற்றது. ஆளும் கட்சியாக இருந்தும், பல முறைகேடு குற்றச்சாட்டுக்கு ஆளாகியும் அ.தி.மு.க-வால் அதிக இடங்களைப் பெற முடியவில்லை.ஆனால், ஊராட்சி ஒன்றியம்,மாவட்ட ஊராட்சி தலைவர், துணைத் தலைவர் பதவிகளை பிடிப்பதில் அ.தி.மு.க அதிக கவனம் செலுத்தியது.

தேனி மாவட்டம் கடகமலை மயிலை ஒன்றியத்தில் பெரும்பான்மை கவுன்சிலர்களை பெற முடியாத அ.தி.மு.க நேரம் பார்த்து தி.மு.க கவுன்சிலர் ஒருவரை இழுத்திருப்பது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ஊரக உள்ளாட்சித் தேர்தல்களில் அதிக இடங்களில் தி.மு.க கூட்டணி வெற்றி பெற்றது. ஆளும் கட்சியாக இருந்தும், பல முறைகேடு குற்றச்சாட்டுக்கு ஆளாகியும் அ.தி.மு.க-வால் அதிக இடங்களைப் பெற முடியவில்லை.ஆனால், ஊராட்சி ஒன்றியம்,மாவட்ட ஊராட்சி தலைவர், துணைத் தலைவர் பதவிகளை பிடிப்பதில் அ.தி.மு.க அதிக கவனம் செலுத்தியது.தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சி கவுன்சிலர்களை இழுத்து அதிக இடங்களில் அ.தி.மு.க வெற்றி பெற்றது.
இந்த நிலையில் தேனி மாவட்டம் கடமலை – மயிலை ஊராட்சி ஒன்றியத்தில் நடந்த தேர்தலில் தி.மு.க, அ.தி.மு.க தலா 7 இடங்களில் வெற்றி பெற்றன.

mk stalin

இதனால், தலைவர், துணைத் தலைவரை தேர்வு செய்வதில் பிரச்னை ஏற்பட்டது. இதனால் இரண்டு முறை தலைவர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் 8வது வார்டுக்கு நடந்த தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தமிழ்ச்செல்வன் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து தன்னை அ.தி.மு.க-வில் இணைத்துக்கொண்டார்.
இதனால், அந்த ஊராட்சி ஒன்றியத்தில் அ.தி.மு.க-வின் பலம் 8 ஆக உயர்ந்துள்ளது. தலைவர், துணைத் தலைவர் பதவியை அ.தி.மு.க எளிதில் கைப்பற்றிவிடும். எப்படியாவது ஒரு கவுன்சிலரை அ.தி.மு.க இழுத்துவிடும் என்று தி.மு.க எதிர்பார்த்திருந்தது. ஆட்சி மாறும் அப்போது காட்சிகள் மாறும் என்று மு.க.ஸ்டாலின் எச்சரித்ததையும் மீறி ஒரு கவுன்சிலர் மாறியிருப்பது அவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.