மக்கள் நீதி மய்யத்துக்கு பேட்டரி டார்ச் சின்னம்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

 

மக்கள் நீதி மய்யத்துக்கு  பேட்டரி டார்ச் சின்னம்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

மக்களவை தேர்தலுக்காக மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு  பேட்டரி டார்ச் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.

சென்னை: மக்களவை தேர்தலுக்காக மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு  பேட்டரி டார்ச் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அரசியல் கட்சிகள் அனைத்தும் கூட்டணி மற்றும் தேர்தல் பணிகளில் முனைப்புக் காட்டி வருகின்றனர். தமிழகத்தின் பெரிய கட்சிகள் என்று சொல்லப்படும்,  அதிமுக மற்றும் திமுக ஆகிய  கூட்டணி மற்றும் தொகுதி பங்கீட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே தேர்தலில் களம் காணவுள்ள  நடிகர் கமல்ஹாசன் 40தொகுதிகளிலும், போட்டியிடுவோம் என்று அறிவித்தார். இதையடுத்து மக்கள் நீதி மய்யம் சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட விரும்புவர்களுக்கான விண்ணப்பங்கள் பிப்ரவரி 28ம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகின்றன. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மக்கள் நீதி மய்யம் அலுவலகத்தில்  பலரும் அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலுக்காக மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு பேட்டரி டார்ச் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கமல்ஹாசன், ‘மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு “பேட்டரி டார்ச்” சின்னம் ஒதுக்கிய தேர்தல் ஆணையத்திற்கு நன்றி. பொருத்தமான சின்னம் தான். மக்கள் நீதி மய்யம்  தமிழ்நாட்டிற்கும் இந்திய அரசியலுக்கும் ஒளி தரும் புது விளக்காய் இன்று முதல் மிளிரும்’ என்றும் பதிவிட்டுள்ளார்.