மக்கள் தொகையில் சரிபாதி பேரை தாக்கிய மலேரியா, 1800 பேர் பலி!

 

மக்கள் தொகையில் சரிபாதி பேரை தாக்கிய மலேரியா, 1800 பேர் பலி!

அடுத்த வருடம் அதிபர் பதவிக்கான பொதுத்தேர்தல் வருவதால், மருத்துவ அவசர நிலையை பிரகடனம் செய்ய அதிபர் தயங்குவதால், உலக நாடுகளிடமிருந்து கொசுவலைகள், மருந்துகள், மற்றும் பொருளாதார உதவிகள் கிடைப்பதில் சிக்கல் நீடிக்கிறது.

ஆப்பிரிக்க பெரிய ஏரிக்கரையோர நாடான புருண்டியின் மக்கள் தொகை தோராயமாக 1.10 கோடிபேர். இவர்களில் 57 லட்சம் பேரை மலேரியா தாக்கியுள்ளதாகவும், இந்த வருடத்தின் முதல் ஏழு மாதங்களில் இதுவரை 1800 பேர் இறந்திருப்பதாகவும் ஐ.நாவின் மனிதாபிமான பணிகள் ஒருங்கிணைப்புக் குழு கூறியுள்ளது. ஏற்கெனவே 2017ஆம் ஆண்டு 18 லட்சம் பேர் மலேரியாவில் பாதிக்கப்பட்டு, அதில் 700 பேர் இறந்துபோனநிலையில், இரண்டே ஆண்டுகளில் மலேரியா திரும்பவும் தலைதூக்கியுள்ளது.

Health worker in Burundi

உலகின் மிக ஏழ்மையான நாடுகளில் ஒன்றான புருண்டியில் ஏற்கெனவே உள்நாட்டு கலவரத்தால் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி, நான்கு லட்சத்திற்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளனர். அடுத்த வருடம் அதிபர் பதவிக்கான பொதுத்தேர்தல் வருவதால், மருத்துவ அவசர நிலையை பிரகடனம் செய்ய அதிபர் தயங்குவதால், உலக நாடுகளிடமிருந்து கொசுவலைகள், மருந்துகள், மற்றும் பொருளாதார உதவிகள் கிடைப்பதில் சிக்கல் நீடிக்கிறது. தேர்தலா மக்கள் நலனா என்று வரும்போது, உலகம் முழுக்க அரசியல்வாதிகள் எல்லாரும் ஒரே மாதிரிதான் இருக்கிறார்கள்.