மக்கள் ஊரடங்கு நிறைவு… குறைந்த அளவில் அரசு பேருந்துகள் இயக்கம்!

 

மக்கள் ஊரடங்கு நிறைவு… குறைந்த அளவில் அரசு பேருந்துகள் இயக்கம்!

கொரோனா குறித்து மக்கள் பீதியடைந்திருந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாட்களுக்கு முன்னர் மக்களிடம் உரையாடினார்.

கொரோனா குறித்து மக்கள் பீதியடைந்திருந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாட்களுக்கு முன்னர் மக்களிடம் உரையாடினார். அதில், கொரோனா இந்தியாவுக்கு வராது என்று நினைக்க வேண்டாம். மிகவும் மோசமான நிலையில் இருக்கிறோம். குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் வெளியே வர வேண்டாம். முடிந்தவரை 22 ஆம் தேதி வரை வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். யாரும் மெத்தனமாக இருக்க வேண்டாம். கொரோனா இந்தியாவைப் பாதிக்காது என்று எண்ணினால் அது தவறு. வரும் சில வாரங்களுக்கு அரசுடன் ஒத்துழைப்பு கொடுங்கள் என்று தெரிவித்தார்.

 

ttn

பிரதமரின் வேண்டுகோளுக்கு இணங்க நேற்று காலை 7 மணி முதல் நாடு முழுவதும் சுய ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. பேருந்துகள், ரயில்கள் என ஏதும் இயக்கபடாததால் நாடே வெறிச்சோடி காணப்பட்டது. அதனையடுத்து தன்னலம் பாராது மக்களை காப்பதற்காக உழைக்கும் துப்புரவு  ஊழியர்கள், மருத்துவர்கள், காவல் துறையினர், ஊடகத்தினர் உள்ளிட்டோருக்கு  நேற்று மாலை 5 மணிக்கு மக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர். அதன் பின்னர், ஊரடங்கு உத்தரவு இன்று காலை 5 மணி வரை நீட்டிக்கபட்டது. 

ttn

மக்கள் ஊரடங்கு இன்று காலை 5 மணியுடன் முடிந்ததை தொடர்ந்து, அரசு பேருந்துகள் இயங்கத்தொடங்கியுள்ளன. மேலும், சென்னை, மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் குறைந்த அளவில் மட்டுமே பேருந்துகள் தற்போது இயக்கபட்டு வருகின்றன.